For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு மெத்தை பஞ்சை ஒரு தலையணையில் அடைத்து தைத்துள்ளீர்கள்..’சர்தார்’ மூவியை விமர்சித்த ஆஸி எழுத்தாளர்

  |

  சென்னை: சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து நேற்று அந்தப் படக் குழுவினர் சக்சஸ் மீட் வைத்திருந்தார்கள்.

  அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

  அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசுகையில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஒருவர் பாராட்டிய விதம் பற்றி கூறியிருக்கிறார்.

  உலகமகா நடிப்புடா சாமி.. தலையில் அடியே படல.. சீரியல் சீனையெல்லாம் போட்டு ஷெரினை கலாய்க்கிறாங்க! உலகமகா நடிப்புடா சாமி.. தலையில் அடியே படல.. சீரியல் சீனையெல்லாம் போட்டு ஷெரினை கலாய்க்கிறாங்க!

  ஜி.வி.பிரகாஷ் பாராட்டு

  ஜி.வி.பிரகாஷ் பாராட்டு

  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியபோது, சில பாடல்கள் எழுதி, ரெக்கார்டிங் கூட முடித்து விடுவோம். பிறகு வந்து இயக்குநர் வேண்டாம் என்று கூறுவார். உடனே எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அடுத்த மாற்று பாடலை உருவாக்குவதில் தயாராகிவிடுவோம். ஒரு பாடலை நடிகர் கார்த்தியை வைத்து ஏழு மணி நேரம் பதிவு செய்தேன். அது கிளாசிக்கல் பாடல் என்பதால் பாடகர்கள் கூட சிரமப்படுவார்கள். ஆனால் கார்த்தி சிறப்பாக பாடினார். ஆயிரத்தில் ஒருவன், கொம்பன் படங்களைத் தொடர்ந்து இப்போது சர்தார் திரைப்படத்திலும் எங்களது வெற்றிக் கூட்டணி இடம் பெற்றிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

  நைல் நதி

  நைல் நதி

  நைல் நதி கரையோரத்தில் என்ன விதை போட்டாலும் அது செடியாக வளர்ந்து விடும். அதேபோல இந்த மையக்கருவை வைத்துக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தவுடன் பல கோணங்களில் இருந்து எழுத முடிந்தது. எங்களுடைய வேலை அதனை ஒரு திரைக்கதையாக, திரைப்படமாக சுருக்குவதாக மட்டுமே இருந்தது. படத்தின் எடிட்டியில் கூட எனக்கும் எடிட்டர் ரூபனுக்கும் பயங்கரமாக சண்டை வரும், அப்போது உங்களுக்கு மித்திரன் என்கிற பெயருக்கு பதிலாக மாத்ரன் என்கிற பெயர் வைத்திருக்கலாம் என்று கிண்டல் செய்வார் என மித்ரன் கூறியிருக்கிறார்.

  வாயிலேயே பின்னணி இசை

  வாயிலேயே பின்னணி இசை

  நடிகர் கார்த்தி பேசும் பொழுது மற்ற படங்களை விட இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் கடினமாக உழைத்ததை நான் பார்த்தேன். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசமான சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும். அதனை படம் பிடிக்கும் போது இயக்குநர் மித்ரன் வாயிலேயே பின்னணி இசை வாசித்து இந்த இடம் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும், அதனால் சண்டை காட்சியும் அது போல இருக்க வேண்டும் என்று வேலை வாங்கினார் என கூறியிருந்தார்.

  மெத்தை தலையணை

  மெத்தை தலையணை

  மக்களுக்கு புரியும் வகையில் எந்த கருத்தையும் நீக்காமல் தெளிவாக சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தபோது எடிட்டிங்கில் நிறைய வேலை இருந்தது. அதனை எடிட்டர் ரூபன் சிறப்பாக செய்து முடித்தார். படத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஒருவர், ஒரு மெத்தையில் வைக்க வேண்டிய பஞ்சை ஒரு தலையணையில் வைத்து தைத்து விட்டீர்கள் என்று பாராட்டினார். ஆனால் அதனை பாராட்டு என்பதை தாண்டி விமர்சனமாகவும் கருதுகிறேன். அடுத்த முறை அதற்கு ஏற்றார் போல பணிபுரிய வேண்டும் என்று நினைக்கிறேன் என இயக்குநர் மித்ரன் கூறியிருக்கிறார்.

  English summary
  Sardar Movie Success Meet: The film crew held a success meet yesterday following the massive success of Sardar. In that press conference they have announced that they are going to make the second part of Sardar. Director PS Mithran spoke about the way an Australian writer praised him in that program.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X