»   »  பேய்ன்னா பயமா... இந்த ட்ரெய்லரை பார்க்காதீங்க - ஆண்ட்ரியாவின் 'அவள்' ட்ரெய்லர்

பேய்ன்னா பயமா... இந்த ட்ரெய்லரை பார்க்காதீங்க - ஆண்ட்ரியாவின் 'அவள்' ட்ரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமலால் அரசியலில் ஜெயிக்க முடியாது:சாருஹாஸன்-வீடியோ

சென்னை : சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் 'The House Next Door' எனும் திகில் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. தமிழில் 'அவள்' எனும் பெயரில் இந்தப் படம் தயாராகி வருகிறது.

மிலிந்த் ராவ் இயக்கும் இந்த திகில் திரைப்படம் வரும் நவம்பரில் மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Aval trailer out now

'அவள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை இயக்குநர் மிலிந்த், சித்தார்த் ஆகியோர் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

Aval trailer out now

அதன்படி, 'அவள்' படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியானது. 'The conjuring' ஹாலிவுட் பேய்ப் படம் போல எடுக்கப்பட்டிருக்கிறது 'அவள்' திரைப்படம். 'பயம் உள்ளவர்கள் இந்த ட்ரெய்லரை பார்க்க வேண்டாம்' என கேப்ஷனும் போடப்பட்டிருக்கிறது.

ஆண்ட்ரியாவின் நடிப்பில் இந்தத் திரைப்படம் திகில் படப் பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குமா அல்லது 'என்ன பேய் பயமுறுத்தும்னு சொன்னீங்க... எப்ப வரும்?' என பல்பு வாங்குமா என்பது படம் வெளியானதும் தெரியவரும்.

English summary
Siddharth and Andrea's 'Aval' is a horror film will be released in trilingual. The movie Aval's Thriller Trailer was released just before. Caption has also been put on 'Watch at your own risk'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil