Don't Miss!
- News
எப்போ கல்யாணம்.. பொண்ணு எப்படி இருக்கணும்? பட்டுனு வந்த கேள்வி! யோசிக்காமல் சட்டுனு பதிலளித்த ராகுல்
- Finance
10 மாதம் தான் ஆச்சு.. அதற்குள்ள வேலை போச்சு.. என்ன செய்யுறது.. 60 நாட்களுக்குள் வேலை கிடைக்குமா?
- Lifestyle
பெற்றோர்களே! நீங்க உங்க குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம் அவங்க வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
‘RRR‘ பார்த்து வியந்துபோன ஜேம்ஸ் கேமரூன்...ராஜமவுலி நெகிழ்ச்சி!
சென்னை : ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி உள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ் ராஜமௌலி பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தார்.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்,ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண்,சமுத்திரக்கனி ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... ஆர்ஆர்ஆர் டீமிற்கு வாழ்த்து சொன்ன இளையராஜா!

ஆர்.ஆர்.ஆர்
தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயரில் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் 1200கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இரண்டு விருதுகள்
இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி அண்மையில் பிரபல ஹாலிவுட் விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை வென்றார். மேலும், க்ரிடிக்ஸ் சாய்ஸ் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான விருது ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த பாடலுக்கான விருதும் இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு கிடைத்துள்ளது.

உலகின் உச்சியில் இருக்கிறேன்
இந்த Critics Choice Awards விழாவில் பங்கேற்ற இயக்குநர் ராஜமௌலி, அவதார் 2 திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசினார். அவருடனான சந்திப்பு குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜமௌலி பகிர்ந்துள்ளார். அதில் ஜேம்ஸ் கேமரூன், ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து பாராட்டியதாகவும், அவரது மனைவி சுஜிக்கு அந்த படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்ததுடன், மீண்டும் இரண்டாவது முறையாக ஆர்ஆர்ஆர் படத்தை மனைவியுடன் பார்த்ததாகவும் கூறினார். என்னுடன் 10 நிமிடம் கேமரூன் செலவிட்டதை என்னால், நம்பமுடியவில்லை, அவர் கூறியது போல் தற்போது நான் உலகின் உச்சியில் இருக்கிறேன் என்றும் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்கர் ரேஸில்
ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கர் விருதை வாங்கியே தீர வேண்டும் என்கிற முனைப்புடன் மொத்தம் 14 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர் படம் நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 24 ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இறுதிப்பட்டியலில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.