Don't Miss!
- Sports
"அந்த ரிஸ்க்கை மட்டும் எடுக்கல.. இல்லைனா.." இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!
- News
ப்பா அடி மேல் அடி.. 4 நாளில் எல்லாம் போச்சு.. புதிய பங்கு விற்பனையை கைவிட்ட அதானி என்டர்ப்ரைஸ்!
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவதார் 2 இரண்டாம் நாள் வசூல்: பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை... இதுதான் லைஃப் டைம் செட்டில்மென்ட்
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 16ம் தேதி வெளியானது.
உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியாகியுள்ள அவதார் 2 படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், முதல் இரண்டு நாட்களிலேயே அவதார் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை, பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது.
Avatar 2 Review: ஜேம்ஸ் கேமரூனின் ப்ளூ மேஜிக் மீண்டும் கை கொடுத்ததா? அவதார் 2 விமர்சனம்!

அவதார் 2 பாக்ஸ் ஆபிஸ்
ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் இரண்டாம் பாகம் 16ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 2009ல் வெளியான அவதார் முதல் பாகத்தின் வெற்றியை விடவும், இரண்டாம் பாகம் விஷுவலாக சூப்பர் ட்ரீட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவதார் 2 வெளியான இரண்டே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் சூப்பர் கலெக்ஷன்
இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் அவதார் 2 வெளியாகியுள்ளது. இந்தியாவில் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக 20 கோடி ரூபாய் வசூலித்த அவதார் 2, இதுவரை மொத்தம் 42 கோடி வசூலித்துள்ளதாம். இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே 22 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாம். மற்ற மாநிலங்களில் மொத்தம் 20 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் வசூலில் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போன்ற ஹாலிவுட் படங்களின் சாதனையை அவதார் 2 முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகளவில் தரமான சம்பவம்
இந்தியாவில் முதல் இரண்டு தினங்களில் 42 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ள அவதார் 2, முதல் வாரத்திலேயே 100 வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் உலகம் முழுவதும் அவதார் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பிரமிக்க வைத்துள்ளது. அதன்படி அவதார் 2 படம் ஒட்டுமொத்தமாக 2200 கோடி ரூபாய் வசூலித்து லைஃப் டைம் செட்டில்மென்ட் கிடைத்துள்ளது. இந்த வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அவதார் 2 பட்ஜெட்
அவதார் 2 திரைப்படம் மொத்தம் 7500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பிரம்மாண்டத்தின் உச்சமாக ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, ஐமேக்ஸ் திரையரங்குகளில் 3டியில் பார்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் ஐமேக்ஸ் திரைகளில் 3 டி டெக்னாலஜியில் அவதார் 2 படம் பார்க்க, 2500 முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஆனாலும், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஜேக், நேத்ரி அவரின் குழந்தைகளை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். மேக்கிங், விஷுவல் ட்ரீட் என எல்லா வகையிலும் ரசிகர்களை மிரட்டியுள்ள அவதார் 2, இன்னும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.