அடுத்த பாயாசம் ஆயிஷாவுக்குத்தான்.. கமலையே எதிர்த்து பேசுவதா.. ஜிபி முத்து போல கிளம்ப வேண்டியதுதான்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமே கமல் சார் முன்னாடி அடக்கி வாசித்து வரும் நிலையில், ஆயிஷா கடைசி வரை காட்டிய ஆட்டிட்டியூட்டும் மீண்டும் ஷெரினாவுடன் மலையாளத்தில் பேசியதும் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

அடுத்த வாரம் நாமினேஷனில் சிக்கினாலும் சரி சிக்கவில்லை என்றாலும் சரி வெளியேற ரெடியாகிடுமா ஆயிஷா என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஜிபி முத்து போல ஆயிஷாவும் விரைவில் வாக்கவுட் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் #Ayesha ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கமலுக்கு மரியாதை

கமலுக்கு மரியாதை

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்வது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் என்கிற நினைப்பு இதுவரை வீட்டில் இருந்த பல போட்டியாளர்களுக்கும் இருந்து வந்த நிலையில், ஆயிஷாவுக்கு அது கொஞ்சம் கூட இல்லை என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். அடுத்தவரை மாக் செய்யும் அசீமே அடங்கி ஒடுங்கி உள்ள நிலையில், நீ என்னம்மா அவரை போய் போர்ட்ரே பண்ணாதீங்கன்னு சொல்ற என வெளுத்து வருகின்றனர்.

ஆயிஷா ஆட்டிட்டியூட்

ஆயிஷா ஆட்டிட்டியூட்

குறும்படம் போட்டும் புரியவில்லை என அசீமும் ஆயிஷாவும் மீண்டும் மீண்டும் குறும்படம் போட வைத்தே கமலை கடுப்பேற்றி விட்டனர். நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என கமல் அசீமின் வாயை அடைத்து விட்டார். அதே போல ஆயிஷாவிடம் பேசிய கமலையே என்ன தப்பா போர்ட்ரே பண்ணாதீங்க என சொன்னதும் கமல் சிரித்த சிரிப்பு இருக்கே அதிலேயே ஆயிஷாவின் கேம் ஓவர் என்பது புரிந்து விட்டது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அடுத்த பாயாசம்

அடுத்த பாயாசம்

கொஞ்சம் கூட முன் யோசனை இல்லாமல் இப்படி பிக் பாஸ் ஹோஸ்ட் கமல் சாரிடமே உன் திமிர் பேச்சை காட்டிட்டீயே ஆயிஷா அடுத்த பாயாசம் உனக்குத் தான். நாமினேஷனில் வந்தால் மக்கள் ஓட்டு சுத்தமாக உனக்கு கிடைக்காது என்றும் அப்படியே நாமினேஷனில் எஸ்கேப் ஆனாலும் வாக்கவுட் நிச்சயம் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ஜிபி முத்துவை போல

ஜிபி முத்துவை போல

பாதாம் தெரிந்த ஜிபி முத்துவுக்கு கமல் சொன்ன ஆதாம் தெரியவில்லை என்பதற்காகவே 2வது வாரத்தில் அதிரடியாக அவர் வெளியேற்றப்பட்டார் என்றும் ஜிபி முத்து அறியாமல் செய்த தவறுக்கே அப்படியொரு தண்டனை என்றால், ஆயிஷாவின் நிலை ரொம்பவே பரிதாபம் தான் என்றும் கண்டிப்பாக அடுத்த பலியாடு ஆயிஷா தான் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X