»   »  ஆயுத பூஜைக்காக விக்ரமுடன் போராடும்... பாபி சிம்ஹா

ஆயுத பூஜைக்காக விக்ரமுடன் போராடும்... பாபி சிம்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் 21 ம் தேதி ஆயுத பூஜையன்று விக்ரமின் 10 எண்றதுக்குள்ள திரைப்படமும், பாபி சிம்ஹாவின் கோ 2 திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

ஒரே நாளில் 2 படங்களும் வெளியாவதால் முதல்முறையாக விக்ரமுடன் மோதவிருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா, முதன்முறையாக இருவரும் மோதுவதால் இந்த மோதலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி தற்போது திரையுலகத்தில் எழுந்துள்ளது.


2 படங்களின் பலம், பலவீனம் படத்தில் நடித்த நடிக, நடிகையர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.


10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

விக்ரம் - சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 10 எண்றதுக்குள்ள, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோசுடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


தமிழில் முதல்முறையாக

தமிழில் முதல்முறையாக

அதிரடி ஆக்க்ஷன் கலந்து உருவாகியிருக்கும் இப்படம் தமிழில் முதல்முறையாக சாலைகளைப் பற்றிய படமாக அமைந்திருக்கிறது. இதற்குமுன் ஒரு சில படங்கள்( நெடுஞ்சாலை, உதயம் NH4) வந்திருந்தாலும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கு இணையாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விஜய் மில்டன்.


ஐ படத்திற்குப் பின்

ஐ படத்திற்குப் பின்

பொங்கலுக்கு வெளியான ஐ திரைப்படத்திற்குப் பின் விக்ரம் நடிப்பில் சுமார் 10 மாதங்கள் கழித்து வெளியாகும் படம் என்பதால், இந்தப் படத்திலும் வழக்கம் போல விக்ரம் தனது ஸ்பெஷல் நடிப்பைக் கொடுத்திருப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


கோலிசோடாவிற்குப் பின்பு

கோலிசோடாவிற்குப் பின்பு

கோலிசோடா என்ற மாபெரும் ஹிட்டிற்குப் பின் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் 2 வது படமென்பதால் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என்று திரையுலகில் ஒரு பேச்சு அடிபடுகிறது. படத்தை முருகதாஸ் தயாரித்திருப்பது சமந்தா முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடிப்பது போன்ற காரணங்கள் படத்தின் பலமாக மாறியிருக்கின்றன.


கோ 2

கோ 2

ஜீவாவின் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வெளியான கோ திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டராக அமைந்தது, சுமார் 4 வருடங்கள் கழித்து கோ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் கோ 2 வைக் கையில் எடுத்திருக்கிறது.


அது வேற இது வேற

அது வேற இது வேற

ஆனால் கோ 2 என்று தலைப்பில் வைத்திருந்தாலும் கோ படத்திற்கும் கோ 2 படத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது.


மாறிய நட்சத்திரங்கள்

மாறிய நட்சத்திரங்கள்

கோ படத்தில் நடித்த பிரகாஷ் ராஜை தவிர மற்ற அனைவருமே இந்தப் படத்தில் புதிதாக இணைந்திருக்கின்றனர். பாபி சிம்ஹா- நிக்கி கல்ராணி நடிப்பில் கோ 2 உருவாகியிருக்கிறது, அறிமுக இயக்குநர் சரத் படத்தை இயக்கியிருக்கிறார். அரசியல் கலந்த த்ரில்லராக கோ2 தயாராகியிருக்கிறது.


ஆயுத பூஜையில் மோதும் விக்ரம் - பாபி சிம்ஹா

ஆயுத பூஜையில் மோதும் விக்ரம் - பாபி சிம்ஹா

ஆயுத பூஜையன்று விக்ரமின் 10 எண்றதுக்குள்ள திரைப்படத்துடன் பாபி சிம்ஹாவின் கோ 2 வெளியாகிறது, இதன் மூலம் முதன்முறையாக விக்ரமுடன் மோதவிருக்கிறார் பாபி சிம்ஹா.


மோதலில் வெற்றி பெறப்போவது சீயானா, அசால்ட் சேதுவா பொறுத்திருந்து பார்க்கலாம்....English summary
Ayudha Pooja Battle: Bobby Simha Clash With Vikram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil