»   »  டிக்கெட் முன்பதிவில் 'பாகுபலி 2' செய்த சூப்பர் சாதனை பற்றி தெரியுமா?

டிக்கெட் முன்பதிவில் 'பாகுபலி 2' செய்த சூப்பர் சாதனை பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படம் ரிலீஸாகும் முன்பு வினாடிக்கு 12 டிக்கெட் விற்றதாக புக்மைஷோ இணையதளம் தெரிவித்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ. 121 கோடி வசூல் செய்தது.

பாகுபலி 2 டிக்கெட்டை பலரும் புக்மைஷோ இணையதளம் மூலம் முன்பதிவு செய்தனர், செய்து வருகிறார்கள்.

புக்மைஷோ

புக்மைஷோ

பாகுபலி 2 படம் ரிலீஸாகும் முன்பு 33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என்று புக்மைஷோ இணையதளம் தெரிவித்துள்ளது.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி 1 படத்தை விட பாகுபலி 2 படத்திற்கு தான் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்தனர். பாகுபலியை விட பாகுபலி 2க்கு 350 சதவீதம் கூடுதல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது என்கிறது புக்மைஷோ.

இந்தி

இந்தி

தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடும் பாகுபலி 2 படம் இந்தி பேசும் ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் இந்திய திரைப்படத்துறையை வியக்க வைத்துள்ளது என புக்மைஷோ தெரிவித்துள்ளது.

மொழி

படத்திற்கு மொழி முக்கியம் இல்லை என்பதை பாகுபலி 2 நிரூபித்துள்ளது. ரிலீஸாகும் முன்பே இது பிளாக்பஸ்டர் என்பதை நிரூபித்துள்ளது. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என்பதற்கு பாகுபலி 2 ஒரு உதாரணம் என்கிறது புக்மைஷோ.

English summary
Online entertainment ticketing platform BookMyShow said it has so far sold over 3.3 million tickets for "Baahubali 2", which was released across the country on Friday, or 12 tickets every second a day before the release of filmmaker S.S. Rajamouli's magnum opus.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil