»   »  ராணாவின் பிறந்தநாளுக்கு ராஜமவுலி அளித்த சர்பிரைஸ் கிப்ட்

ராணாவின் பிறந்தநாளுக்கு ராஜமவுலி அளித்த சர்பிரைஸ் கிப்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ராணாவின் 32வது பிறந்தநாளான இன்று பாகுபலி 2 படத்தில் அவரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் ராணா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Baahubali-2 Rana Dagubatti first look as Bhalladeva out on his B'day

இந்நிலையில் அவருக்கு இயக்குனர் ராஜமவுலி மற்றும் பாகுபலி 2 படக்குழுவினர் சிறப்பு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளனர். அதாவது பாகுபலி 2 படத்தில் பல்லால தேவனாக வரும் ராணாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

பாகுபலி படம் ரூ.650 கோடி வசூல் செய்தது. பாகுபலி 2 படமும் அதே போன்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

    English summary
    Makers of Baahubali 2 have released the first look of Bhallaladeva from the movie on Rana's 32nd birthday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil