»   »  விரைவில் சீனத் திரைகளை ஆக்கிரமிக்கும் பாகுபலி 2!

விரைவில் சீனத் திரைகளை ஆக்கிரமிக்கும் பாகுபலி 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியப் படங்களுக்கான சர்வதேச சந்தை கிட்டத்தட்ட ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மாறிவிட்டது.

இந்தியப் படங்கள் சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட்டைப் பிடித்தது என்றால் அது ரஜினிகாந்தின் சிவாஜி படத்துக்குப் பிறகுதான் எனலாம். அதன் பிறகு தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் இந்திப் படங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசிய கண்ட நாடுகளில் அமோக வரவேற்பு.

Baahubali 2 soon hits China screens

சில ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தப் படங்களுக்கு நல்ல வசூல். ஆமிர்கானின் டங்கல் படத்துக்கு இந்தியாவில் கிடைத்த வசூலை விட அதிகமாக வெளிநாடுகளில் கிடைத்தது. ரஜினிகாந்தின் கபாலிக்கு தமிழகத்தில் கிடைத்ததை விட ஒன்றரை மடங்கு அதிக வசூல் வெளிநாடுகளில் கிடைத்து.

குறிப்பாக டங்கல் படம் சீனாவில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி ரூ 1000 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து தன்னிகரில்லாத படமாக நிற்கிறது.

கடந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் பல சாதனைகளை நிகழ்த்திய படம் எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி 2. இந்திய அளவில் பிரமாண்டம், வசூல் இரண்டிலும் இந்தப் படத்துக்கு நிகராக வேறு எந்தப் படத்தையும் சொல்ல முடியாது எனும் அளவுக்கு சிறப்பான படமாக அமைந்தது.

இப்போது இந்தப் படத்தை சீனா முழுவதும் வெளியிடுகின்றனர். இஸ்டார் எனும் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. பாகுபலி முதல் பாகம் சீனாவில் வெளியாகி ரூ 7.3 கோடியை வசூலித்தது. ஆனால் பாகுபலி 2 குறைந்தது ரூ 500 கோடியையாவது ஈட்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

English summary
Baahubali 2 will be released in 1000 plus screens in China soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X