»   »  பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்ததுடன் வெள்ளி விழா கொண்டாடிய பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான்

பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்ததுடன் வெள்ளி விழா கொண்டாடிய பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படமும், பிரபாஸின் பாகுபலியும் பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்ததுடன் 50 நாட்களாக தனது இடத்தை தக்க வைத்துள்ளன.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸான தேதியில் இருந்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ரசிகர்கள் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். அதனால் பாகுபலி பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்தது.

பஜ்ரங்கி பாய்ஜான்

பஜ்ரங்கி பாய்ஜான்

பாகுபலி படம் பாக்ஸ் ஆபீஸை கலக்கிக் கொண்டிருப்பதை பார்த்து மக்கள் வியந்து கொண்டிருக்கையில் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் வெளியானது.

சல்மான்

சல்மான்

பாகுபலி ஒரு பக்கம் வசூல் வேட்டை நடத்தினால் சல்மானின் பஜ்ரங்கி பாய்ஜான் மறுபக்கம் வசூலை அள்ளிக் குவித்தது. இதை பார்த்து ராஜமவுலியும், பஜ்ரங்கி பாய்ஜான் இயக்குனர் கபீர் கானும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெள்ளி விழா

வெள்ளி விழா

அண்மை காலமாக படங்கள் சில நாட்களில் தியேட்டரில் இருந்து வெளியேறுகையில் பாகுபலியும், பஜ்ரங்கி பாய்ஜானும் வசூல் வேட்டை நடத்தியதோடு மட்டும் அல்லாமல் தொடர்ந்து 50 நாட்களாக தங்களின் இடத்தை தியேட்டர்களில் தக்க வைத்து வெள்ளி விழா கொண்டாடியுள்ளன.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பாகுபலியும், பாய்ஜானும் ரிலீஸாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

100 நாட்கள்

100 நாட்கள்

முன்பு எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் முக்கியம் என்றாலும் படங்கள் வெள்ளி விழா, பொன் விழா, 100வது நாள் கொண்டாடுவதையும் வெற்றியாக கருதப்பட்டது. தற்போது படங்கள் 50 நாட்களை தொடுவதே பெரிய விஷயமாக உள்ளது.

English summary
Baahubali and Bajrangi Bhaijaan have not only did extremely well at Box office but also managed to retain their positions in the theatre for 50 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil