“அந்த ஒரு பாட்டு போதும்”… பொன்னியின் செல்வன் ரசிகர்களை வம்பிழுத்த டோலிவுட் பாகுபலியன்ஸ்
சென்னை: தமிழில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று (செப் 30) திரையரங்குகளில் வெளியானது.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலி பட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வெளியானது பொன்னியின் செல்வன்
கோலிவுட்டின் பல வருட கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் ரிலீஸான பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு போன்றவற்றை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் வெளியாகும் முன்பே ராஜமெளலியின் பாகுபலி, கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விவாதித்து வந்தனர்.

ராஜமெளலியின் பாகுபலி
தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தன. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பலரும் நடித்திருந்த இந்தப் படம், வரலாற்றுப் பின்னனியில் உருவாகியிருந்தது. பாகுபலி படம் வெற்றி பெற்ற பின்னர் இந்திய சினிமாவில் பான் இந்தியா படங்களின் எண்ணிக்கையும் அதிகமானது, ஹிஸ்டாரிக்கல் ஜானர் படங்களும் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. பாகுபலி படத்தின் மேக்கிங் ரசிகர்களால் ரொம்பவே கொண்டாடப்பட்டது.

வம்பிழுக்கும் பாகுபலியன்ஸ்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு தமிழ்நாட்டை போல மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தை பெரியளவில் பாராட்டியும் வருகின்றனர். ஆனால் இந்த பாகுபலி ரசிகர்களுக்கு மட்டும் பொன்னியின் செல்வன் படத்தை ட்ரோல் செய்வதே வாடிக்கையாக உள்ளது. இதனிடையே டோலிவுட் ரசிகர் ஒருவர், பாகுபலி படத்தின் பாடலை ஷேர் செய்து, இந்த ஒரு பாடலுக்கு கூட பொன்னியின் செல்வன் டஃப் கொடுக்க முடியாது என்றபடி ட்வீட் செய்துள்ளார்.

பதிலடி கொடுத்த பொன்னியின் செல்வன்ஸ்
இதனையடுத்து பாகுபலியன்ஸின் ட்ரோலுக்கு பொன்னியின் செல்வன் ரசிகர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "இந்தக் காட்சிக்கும் பொன்னியின் செல்வனுக்கு என்னய்யா கனெக்ஷன் இருக்கு. பாகுபலி ஒரு கற்பனை கதை. பொன்னியின் செல்வன் ஹிஸ்டாரிக்கல் ஜானர் மூவி. இதுக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு பாகுபலியன்ஸை வறுத்தெடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் VS பாகுபலியன்ஸ் சண்டை ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











