»   »  பாகுபலி படத்தை ட்விட்டரில் வாழ்த்திய நட்சத்திரங்கள்

பாகுபலி படத்தை ட்விட்டரில் வாழ்த்திய நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று உலகம் முழுவதும் பாகுபலி படம் வெளியாகி இருக்கிறது, இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த படம் என்பதால் தியேட்டர்களில் ஒருவாரத்திற்கு முன்பதிவு செய்து வைத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இன்று வெளியாகி இருக்கும் படத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

நாம் தங்கத் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழில் வெளியாகி இருக்கும் பாகுபலி படத்திற்கு நட்சத்திரங்கள், தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்திருப்பதைக் காணலாம்.

தமிழ்நாடு தவிர்த்து மற்ற இடங்களிலும், பாகுபலி படத்திற்கு வரவேற்பு எந்த அளவில் இருக்கிறது என்பதையும், இணைத்திருக்கிறோம்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்

தெலுங்கு தமிழில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், பாகுபலி டீமிற்கு எனது வாழ்த்துக்கள், டார்லிங் பிரபாஸ் மற்றும் மொத்த படக்குழுவினரும் அசத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர்தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

தரன் ஆதர்ஷ்

படங்களைப் பற்றி முழுமையாக தகவல்கள் அளிக்கும் பாலிவுட்டின் தரன் ஆதர்ஷ், பாகுபலியில் நடித்தவர்கள் அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர். பிரபாஸ் மற்றும் ராணா உங்கள் இருவரின் நடிப்பும் சூப்பர் என்று பாராட்டியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

தமிழின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் பாகுபலி டீமிற்கு எனது வாழ்த்துக்கள், படம் ஒரு பயங்கரமான வெற்றியைக் குவிக்கப் போகிறது. இனிமேலும் என்னால் தாமதிக்க முடியாது, படத்தை உடனடியாகப் பார்க்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தனுஷ்

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார், பாகுபலி டீமிற்கு எனது வாழ்த்துக்கள் படம் மாபெரும் வெற்றியடைய நான் மனதார இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது இனிய நண்பர்களான அனுஷ்கா மற்றும் ராணாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நான் உறுதியாகச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரணிதா

நடிகை பிரணிதா எனது ட்விட்டர் லிங்க் முழுவதுமே பாகுபலி படத்தைப் பற்றிய கருத்துக்களால் நிரம்பி வழிகிறது, பாகுபலி படம் வெளியாவதை இந்தியாவே கொண்டாடுகிறது.பார்ப்பதற்கு அழகான காட்சி இது என்று கூறியுள்ளார்.

டாப்ஸி பன்னு

நடிகை டாப்ஸி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது அதன் பெயர் பாகுபலி, இந்த உலகம் அதன் ஆரம்பத்தில் விழித்து எழுகின்றது என்று கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் "படம் வெற்றிபெற ஒட்டுமொத்த பாகுபலி டீமிற்கும் எனது வாழ்த்துக்கள், படம் ஒரு நல்ல அதிரடியாக வெளியாகிறது. ராணா மற்றும் டார்லிங் பிரபாஸ் இருவரையும் நான் வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

English summary
Baahubali Movie -Celebrities Wishes In Twitter Page.
Please Wait while comments are loading...