»   »  தென் கொரிய ரசிகர்களை கவர்ந்த பாகுபலி.. ஜப்பான் மொழியிலும் வெளியாகிறது!

தென் கொரிய ரசிகர்களை கவர்ந்த பாகுபலி.. ஜப்பான் மொழியிலும் வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: இந்திய பிளாக் பஸ்டர் திரைப்படமான பாகுபலி ஜப்பான் மொழியிலும் வெளியாக உள்ளது.

தென் கொரியாவின் பூசனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலியின், 'பாகுபலி தி பிகினிங்' திரையிடப்பட்டது. தென் கொரிய ரசிகர்களும், படத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளனர். ராஜமவுலியிடம் ஆட்டோகிராப் வாங்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் கூட்டம் அலைமோதியது.


Baahubali Sells to Japan

இந்நிலையில், பாகுபலி திரைப்பட உரிமை, ஜப்பான் மொழிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிவின் கோ என்ற நிறுவனம், இந்த உரிமையை வாங்கியுள்ளது. இதுவரை உலகமெங்கும் பாகுபலி உரிமை விற்பனை மூலம், தயாரிப்பாளருக்கு 92 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளதாக ஒரு கணக்கு வெளியாகியுள்ளது.


ராஜமவுலி கூறுகையில், "உலகெங்கும் உள்ள மக்கள் ஒரே மாதிரியான உணர்ச்சிகளை கொண்டவர்கள்தான். எனவே, ஜப்பானிலும் இந்த திரைப்படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.

English summary
Leading independent distributor, has acquired Japan rights for "Baahubali: The Beginning," the Indian film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil