»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பாபா படத்தில் ரஜினியை பெரியார் மற்றும் ராஜாஜியுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள பாடலுக்கு தடை விதிக்கக் கோரி திராவிடர் கழகம்வழக்கு தாக்கல் செய்துள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரஜினியின் லோட்டஸ் இன்டர்நேசனல், நடிகர் ரஜினிகாந்த், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, பாடலாசிரியர்வாலி ஆகியோரை இந்த வழக்கில் திராவிடர் கழகம் சேர்ந்துள்ளது.

பிரச்சனைக்குள்ளான பாடல் விவரம்:

ராஜ்ஜியமா இல்லை இமயமா? எனத் தொடங்கும் அந்தப் பாடலில்
கடவுளை மறுத்தவன் நாள்தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆத்திகம்
அதிசயம் அதிசயம்
பெரியார் தான் ஆனெதென்ன ராஜாஜி
வாலி எழுதித் தள்ளியுள்ள இந்தப் பாடலை எதிர்த்துத் தான் திராவிடர் கழகம் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவின் விவரம்:

தமிழகத்தில் ஜாதி முறையை, வர்ணாஸ்ரம முறையை, சனாதன தர்மா ஆகிய ஜாதியைத் தூண்டும் விவகாரங்களை கடுமையாக எதிர்த்தவர்தந்தை பெரியார். இவரது கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து கொண்டவர் ராஜாஜி.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கடவுள் நம்பிக்கையாளராக மாறுவது தான் கதை என பாடலை எழுதிய வாலி பேட்டியில்தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடல் ராஜாஜிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும் அதே நேரத்தில் பெரியாரின் புகழைக் குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.வாலிக்கு தமிழக சமூக வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அது தெரிந்திருக்காவிட்டால் இப்படி தலைவர்களின் பெயர்களை தனதுமனம்போன போக்கில் பாடலில் சேர்த்திருக்கக் கூடாது.

பெரியார் சாகும் வரை தனது நாத்தீகக் கொள்கைகளை விட்டுத் தந்ததில்லை. அவர் ராஜாஜியை பின் பற்றியதும் இல்லை.

தூத்துக்குடியில் பாபா படத்தின் விளம்பரத்தில் திராவிடர் கழகத்தின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் கொள்கைகளை விமர்சிக்கரஜினிக்கு எந்த உரிமையும் இல்லை.

எனவே, பாபா படத்தில் வரும் இந்த சர்ச்சைக்குரிய பாடல், மேலும் வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டும் என்று அந்த மனுவிலகூறப்பட்டுள்ளது.

Read more about: baba, cds, cinema, film, music, news, online, porn, songs, thatstamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil