2வது திருமண சர்ச்சை.. என்ன கிளாரிஃபிகேஷன் கொடுக்கிறதுன்னே தெரியல.. பப்லு பரபரப்பு பேச்சு!
சென்னை: சீனியர் நடிகர் பப்லு மலேசியாவை சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட் நிருபர் நடிகர் பப்லுவுக்கு போன் செய்து விளக்கம் கேட்டார்.
அப்போது, தனது இரண்டாவது திருமண சர்ச்சைக்குறித்து நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

2வது திருமணம் செய்தாரா பப்லு
நடிகர் பப்லு தனது இரண்டாவது மனைவியை அறிமுகம் செய்து வைத்தததாக ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவிலும் பல்வேறு ஊடகங்களிலும் காட்டுத் தீயாக பரவி வருகின்றன. இந்நிலையில், நடிகர் பப்லுவிடமே இது குறித்த விளக்கத்தை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம்..

அப்செட்டில் பப்லு
இந்த விவகாரம் திடீரென எப்படி வெடித்தது என்றும் ஏன் இவ்வளவு பரபரப்பாக மாறியது என்றே புரியாத மனநிலையில், இருந்த நடிகர் பப்லு, காலையில் இருந்து இது தொடர்பாக பல போன் கால்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது என்றார்.

என்ன கிளாரிஃபிகேஷன்
இப்படியொரு விஷயம் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், என்ன கிளாரிஃபிகேஷன் கொடுக்கிறதுன்னே தெரியவில்லை. நாளை ஒரு நாள் பொறுமையாக இருங்கள், இது குறித்து அனைவருக்கும் தெளிவுப்படுத்துகிறேன் எனக் கூறிவிட்டு போனை துண்டித்தார் நடிகர் பப்லு.

மறுக்கவில்லை
56 வயது நடிகர் பப்லு, 23 வயது மலேசிய பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் என்கிற பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து மறுக்கவோ இல்லை திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்று நடிகர் பப்லு ஆமோதிக்கவும் இல்லை.

விரைவில் தெரியும்
நடிகர் பப்லுவுக்கு உண்மையாகவே இரண்டாவது திருமணம் நடைபெற்றதா? அல்லது இது முழுக்க முழுக்க வதந்தியா? என்பது குறித்து நாளை அவரே விவரமாக அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பப்லுவுக்கு பினா என்கிற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆனது. இருவருக்கும் 25 வயதில் அஹத் எனும் மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











