பாத்ரூமில் படு ரொமான்ஸ்.. பிக் பாஸ் வின்னருடன் ஜோடி சேர்ந்த பேச்சுலர் ஹீரோயின்.. செம டைட்டில்!

சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படம் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை திவ்யபாரதி அடுத்ததாக பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

வேலன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் முகேன் ராவ். கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் டைட்டிலை தட்டித் தூக்கியவர் இவர் தான்.

இவரது புதிய படத்தில் தான் நடிகை திவ்யபாரதி இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் படு ரொமான்டிக்கான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

பேச்சுலர் ஹீரோயின்

பேச்சுலர் ஹீரோயின்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான பேச்சுலர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அறிமுக நடிகை திவ்யபாரதியை பார்த்ததுமே ரசிகர்கள் தங்களது தூக்கத்தை தொலைத்தனர். அந்த அளவுக்கு இளைஞர்களை அட்ராக்ட் செய்திருந்தார்.

ஹாட் போட்டோஸ்

ஹாட் போட்டோஸ்

இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புகளை தேடி வருகின்றனர். நடிகை திவ்யபாரதி வெளியிட்ட ஹாட் போட்டோஷூட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அவர் பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக புக் ஆனார். அந்த படம் ஹிட் ஆன நிலையில், வரிசையாக திவ்யபாரதிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் வின்னருடன்

பிக் பாஸ் வின்னருடன்

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ் தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய ஹீரோவாக ஆகிவிட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படம் ஓரளவுக்கு ஓடிய நிலையில், இளைஞர்களை டார்கெட் செய்து அடுத்த படத்தை ஆரம்பித்து இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி ஒப்பந்தமாகி உள்ளார்.

பாத்ரூமில் படு ரொமான்ஸ்

பாத்ரூமில் படு ரொமான்ஸ்

நடிகர்களின் முகங்கள் தெளிவாக தெரியத்தான் ஃபர்ஸ்ட் லுக்கே வெளியாகும். ஆனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் இளைஞர்களை அட்ராக்ட் செய்யவும் பாத்ரூமில் சோப்பு நுரையுடன் குளித்தபடி முகேன் ராவ் மற்றும் திவ்யபாரதியின் முகங்கள் கூட சரியாக தெரியாத படி படு ரொமான்ஸாக ஒரு ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

Bachelor படம் இந்த Generation Youngters-கு, எல்லாரும் Accept பண்ணாங்க | Divya Bharathi Exclusive
என்ன டைட்டில்

என்ன டைட்டில்

மதில் மேல் பூனை என பழமொழி சொல்வார்களே அதை கொஞ்சம் பட்டி டிக்கெரிங் செய்து மதில் மேல் காதல் என வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படத்தை அஞ்சனா அலிகான் இயக்குகிறார். சீரடி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X