twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யதார்த்தமா பேசினா அப்படி தான் இருக்கும்...ஆபாச வசன விமர்சனத்திற்கு பேச்சுலர் பட டைரக்டர் பதில்

    |

    சென்னை : ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்துள்ள பேச்சுலர் படம் ஜூன் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு, இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

    இதில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் அர்ஜூன் ரெட்டி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், வேல்ட் பேமஸ் லவர் போன்ற படங்களை பார்ப்பது போல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    யதார்த்த காதல் கதை

    யதார்த்த காதல் கதை

    இதற்கு படத்தின் டைரக்டர் சதீஷ் செல்வக்குமார் அளித்துள்ள பதில், ஒரு படத்தை போல் உங்களால் மற்றொரு படத்தை எடுக்க முடியாது. வேண்டுமானால் ரீமேக் செய்யலாம். யதார்த்த காதலை பற்றி சொல்வது தான் எங்கள் படம். இந்த கால ஆண் - பெண் உறவின் வெளிப்பாடு தான் இந்த படம்.

    மக்கள் பேசுவது தான் வசனம்

    மக்கள் பேசுவது தான் வசனம்

    எந்த அளவிற்கு யதார்த்தத்தை கொண்டு வர முடியுமோ, அதற்கு முயற்சித்து படம் எடுத்துள்ளோம். இதில் மற்ற படங்களை போல் இருக்கு என நினைப்பதற்கு வழியேயில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில் மக்கள் என்ன பேசுவார்களோ அதை தான் வசனமாக கொண்டு வந்துள்ளோம்.

    விளம்பரத்திற்காக எதுவும் சேர்க்கவில்லை

    விளம்பரத்திற்காக எதுவும் சேர்க்கவில்லை

    ஒருவர் கோபமாக இருக்கும் போது அவரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் வித்தியாசமாக தான் இருக்கும். படம் விற்பனையாக வேண்டும் என்பதற்காக எதையும் நாங்கள் சேர்க்கவில்லை.

    எனக்கு பயம் இல்லை

    எனக்கு பயம் இல்லை

    நான் முதல் முறையாக படம் எடுப்பவன், அதனால் எனக்கு பயம் கிடையாது. நீங்கள் கமர்ஷியலாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக உங்களால் நேர்மையாக இருக்க முடியாது. நான் சரியாக தான் செய்துள்ளேன் என நம்புகிறேன்.

    படத்தை எடுப்பதற்கு முன் குறைந்தது 50 பேரிடமாவது பேசி இருப்போம், ஒரு நடிகர் தத்ரூபமாக அவர்களை போலவே இருக்க வேண்டும் என்பதற்காக. தயாரிப்பாளரும் ஓகே சொன்னதால் தான் படமாக எடுத்தோம்.

    சிவாஜியே பேசிருக்கார் :

    சிவாஜியே பேசிருக்கார் :

    பெண்களை துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற சீன்கள் பல சூப்பர்ஹிட் படங்களிலும் இடம்பெற்றுள்ளது. அது சரியா தவறா என விளக்க முடியாது. ஒரு படத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

    சிவாஜி கணேசனும் கூட நெகடிவ் ரோல் செய்துள்ளார். அவரது வசனங்களை இப்போதும் நாம் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். அந்த வசனங்கள் தவறு என்றால் அது போன்ற தவறு இனி நடக்காமல் நான் விழிப்புடன் இருக்கிறேன் என்றார்.

    English summary
    we were trying to portray a relationship in a realistic way, the rawness was inevitable says Bachelor director Sathish Selvakumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X