»   »  பாண்டியராஜன், பார்த்திபனை தொடர்ந்து வில்லனாகும் பாக்யராஜ்?

பாண்டியராஜன், பார்த்திபனை தொடர்ந்து வில்லனாகும் பாக்யராஜ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநராகவும், நடிகராகவும் சிகரங்களைத் தொட்டவர் கே.பாக்யராஜ். இப்போது மிகவும் செலக்டிவாக அப்பா வேடங்களில் நடித்துவருகிறார். அப்பா வேடங்களாக இருந்தாலும் கூட தன்னுடைய டச் இருப்பது போல பார்த்துக்கொள்கிறார்.

பாக்யராஜ் இதுவரை முழு வில்லனாக நடித்ததில்லை. (விடியும் வரை காத்திரு படத்தில் ஹீரோ கம் வில்லனாகவும் நடித்துவிட்டார்).

Bagyaraj turns villain in Thupparivaalan

ஆரம்ப காலகட்டத்தில் கன்னிப்பருவத்திலே படத்தில் பாதி வில்லனாக நடித்து கலக்கியிருப்பார். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் வில்லன் வேடங்களில் நடிக்க மறுத்து வந்தவர், மிஷ்கினுக்கு மட்டும் ஓகே சொல்லிவிட்டார்.

அவர் இயக்கத்தில் விஷால், ரகுல்ப்ரீத்சிங் நடிக்கும் துப்பறிவாளன் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக செய்தி வருகிறது.

அதுவரை காமெடியனாக பார்த்துவந்த பாண்டியராஜனையே அஞ்சாதே படத்தில் வில்லனாக்கியவர் மிஷ்கின்... பார்ப்போம்!

English summary
Sources say that actor cum director K Bagyaraj turns Villain in in Mysskin’s upcoming Thupparivalan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil