»   »  தீபாவளி ஸ்பெஷல் பைரவா டீஸர் சரவெடியா, புஸ்ஸா போன பட்டாசா?

தீபாவளி ஸ்பெஷல் பைரவா டீஸர் சரவெடியா, புஸ்ஸா போன பட்டாசா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி விருந்தான பைரவா டீஸர் வெளியான 76 மணிநேரத்திற்குள் அதை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. தீபாவளிக்கு விஜய்யின் படம் வராது என்று தெரியும். இருப்பினும் டீஸராவது வெளியாகாதா என தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

Bairavaa teaser gets 5 million hits

அவர்கள் எதிர்பார்த்தபடியே டீஸர் வெளியானது. பைரவா டீஸரில் விஜய் விளையாடலாமா என்று கேட்டது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் அருண் காமராஜின் குரலில் வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டீஸர் வெளியான 76 மணிநேரத்திற்குள் அதை யூடியூப்பில் 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். டீஸர் வெளியாகி நான்கு நாட்களாகியும் யூடியூப்பில் இந்தியா அளவில் டாப்பில் டிரெண்டாகும் வீடியோக்களில் ஒன்றாக உள்ளது.

டீஸரே சும்மா அதிருதுல்ல படம் வரட்டும் என்று உள்ளனர் ரசிகர்கள்.

English summary
Vijay starrer Bairavaa teaser has got 5 million hits on YouTube within 76 hours of its release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos