»   »  முட்டாப் பய, காசெல்லாம் போய் பழையபடி இட்லி கடை வக்கப் போனியா: கஞ்சா கருப்பை கடிந்த பாலா

முட்டாப் பய, காசெல்லாம் போய் பழையபடி இட்லி கடை வக்கப் போனியா: கஞ்சா கருப்பை கடிந்த பாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடி முட்டாள் பய அவன் போய் படம் தயாரிக்கணும்னு. உனக்கு எல்லாம் என்ன தெரியும்னு படம் தயாரிச்ச. இருந்த காசெல்லாம் விட்டயா? பழையபடி இட்லிக் கடை வக்கப் போனியா? என இயக்குனர் பாலா கஞ்சா கருப்பை கடிந்து கொண்டார்.

விக்ராந்தை வைத்து சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் படம் தொண்டன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் பாலா கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறுகையில்,


சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

குடும்பப் பாங்கான படம் எடுப்பவன் சமுத்திரக்கனி. இவனால் எனக்கு இம்சை என்னவென்றால் தமிழ்நாட்டில் எந்த காலேஜ் அல்லது ஸ்கூலில் ஃபங்க்ஷன் நடந்தாலும் எனக்கு போன் பண்ணி உங்களுக்கு அவரை தெரியும்ல அவரை அனுப்பி வைங்க என்கிறார்கள்.


தரமான படம்

தரமான படம்

அவன் ஷூட்டிங்கில் இருப்பானா என்னன்னு தெரியலை வேறு யாராவது நடிகை, நடிகரை அனுப்பவா என்று கேட்டால், வேண்டாம் என்கிறார்கள். ஏன் சமுத்திரக்கனி தான் வேண்டும் என்று கேட்டால் அவர் தான் குழந்தைகளை வைத்து தரமாக படம் எடுக்கிறாரு என்கிறார்கள்.


கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு தேவையில்லாமல் அறிவுக்கு மீறின செயல், அடி முட்டாள் பய அவன் போய் படம் தயாரிக்கணும்னு. உனக்கு எல்லாம் என்ன தெரியும்னு படம் தயாரிச்ச.


இட்லிக் கடை

இட்லிக் கடை

இருந்த காசெல்லாம் விட்டயா? பழையபடி இட்லிக் கடை வக்கப் போனியா? இட்லிக் கடைக்கு போன உன்ன கூடிட்டு வந்து வாழ்க்கை கொடுக்கிறான். இதையாவது வச்சு பொழைச்சுக்கோ. அது தான் உனக்கு சொல்ல முடியும் என்றார் பாலா.


English summary
Director Bala has scolded and advised actor Ganja Karuppu at the audio launch of Samuthirakani's upcoming movie Thondan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil