»   »  வட சென்னைக் கதை.. ஜோதிகாவை வைத்து இயக்கும் பாலா!

வட சென்னைக் கதை.. ஜோதிகாவை வைத்து இயக்கும் பாலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாரை தப்பட்டைக்கு பிறகு குற்றப் பரம்பரையை இயக்கப் போவதாகச் சொன்னார் பாலா. பாரதிராஜா மல்லுக்கு நிற்க இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஒரு அழகான காதல் காமெடி கதையை சிம்பிளாக எடுக்கப் போகிறேன் என்று சாட்டை யுவனையும் சூப்பர் சிங்கர் பிரகதியையும் வைத்து ஆரம்பித்தார். அந்த படமும் அப்படியே நிற்கிறது.

இப்போது ஜோதிகாவை இயக்கவிருப்பதாகவும் அதில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது.

Bala to make a film with North Chennai background

நாம் விசாரித்த வகையில் இது வடசென்னையில் நடக்கும் ஒரு கதையாம். ஏற்கெனவே வடசென்னையை மையமாக வைத்து வெற்றிமாறன் எடுக்கவிருந்த வடசென்னை படம் முதல் ஷெட்யூலோடு நிற்கிறது.

பாலாவின் வடசென்னை படமாவது மூவ் ஆகுமா? என்று பல்லை கடித்து காத்திருக்கிறது கோலிவுட்.

English summary
After two projects dropped Director Bala is going to direct Jyothika in a story based on North Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil