twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை: கே பாலச்சந்தர் சமரச முயற்சி

    By Shankar
    |

    சென்னை: சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நிலவும் பெரும் பிரச்சினையைத் தீர்க்க சமரச முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் கே பாலச்சந்தர்.

    இந்த இரு அமைப்புக்கும் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இப்போது ஈகோ மோதலாக வெடித்து வேறு கட்டத்தில் போய் நிற்கிறது.

    குறிப்பாக 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைதான் இதில் முக்கிய காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

    இதனால் பெப்சி அமைப்பை உடைக்கும் நோக்கில் புதிய முடிவுகளை எடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், மே மாதத்துக்குள் புதிய சங்கத்தை உருவாக்கப் போவதாகவும், இதற்கு தமிழ் சினிமா தொழிலாளர் சங்கம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் இயக்குனர் கே.பாலசந்தர். இவர் பெப்சி அமைப்பின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலச்சந்தரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் தனது முடிவுகளின் செயல்பாட்டை தற்காலிமாக தள்ளி தள்ளி வைப்பதாகவும், பாலச்சந்தருடன் பேசிய பிறகு இறுதி முடிவை அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளது.

    பாலசந்தரின் சமரச முயற்சிகள் எடுபடுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    English summary
    Vetearan film director and former President of FEFSI K Balachander requested producer council to stop its move against FEFSI temporarily.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X