தயவு செஞ்சு தூங்கும் போது அத மட்டும் பண்ணிடாதீங்க.. ரசிகர்களுக்கு ரெக்வஸ்ட் வைத்த பாலாஜி முருகதாஸ்!

சென்னை: பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் தனது புதிய லுக்கில் ஓணம் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

வேட்டி மற்றி சட்டை அணிந்து கொண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இப்போதே தயாராகி விட்டார்.

நாளை திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏகப்பட்ட நடிகைகள் கேரளா புடவையில் கலக்கி வரும் நிலையில், பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புதிய போட்டோக்களை களமிறக்கி உள்ளார்.

மிஸ்டர் இன்டர்நேஷனல்

மிஸ்டர் இன்டர்நேஷனல்

பாடி பில்டிங்கில் அதிக ஆர்வம் வந்ததை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் கடினமாக வொர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்து பல ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டார். மிஸ்டர் இன்டர்நேஷனல் டைட்டில் வரை வாங்கிய பாலாஜி முருகதாஸுக்கு சினிமாவில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.

பிக் பாஸ் சீசன் 4ல்

பிக் பாஸ் சீசன் 4ல்

ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ள பாலாஜி முருகதாஸ் மேலும், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். ஆனால், தனக்கான சரியான இடம் கிடைக்க வேண்டும் என போராடி வந்த அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 மேடை பெரிய மீடியா வெளிச்சத்தை கொடுத்தது.

லவ் டிராக்

லவ் டிராக்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில லவ் டிராக்குகள் ஓடும். கடந்த 4ம் சீசனில் ஷிவானிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் இடையே தான் காதல் டிராக் ஓடியது. நிகழ்ச்சிக்கு பிறகும் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.

ரன்னர் அப்

ரன்னர் அப்

நடிகர் ஆரியுடன் பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே மோதலில் ஈடுபட்டு வந்த பாலாஜி முருகதாஸ் கடைசியில் ஆரிக்கு அடுத்தபடியாக வாக்குகளை அள்ளி ரன்னர் அப் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமீட் ஆவார் பாலாஜி முருகதாஸ் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

விருது விழா சர்ச்சை

விருது விழா சர்ச்சை

பிஹைண்ட்வுட்ஸ் வழங்கிய விருது விழாவில் பாலாஜி முருகதாஸ் பேசிய 2 நிமிட வீடியோ கட் செய்யப்பட்டதை எதிர்த்து அந்த விருதையே திருப்பி தருவதாக அறிவித்தார் பாலாஜி முருகதாஸ். அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் உருவாக்கி பின்னர் அமைதி ஆனது.

நியூ லுக்

நியூ லுக்

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு புதிய தோற்றத்தில் பாலாஜி முருகதாஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த போட்டோக்களில் க்ளீன் ஷேவ் உடன் வித்தியாசமாக காட்சி அளிக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

தூக்க மயக்கத்தில்

தூக்க மயக்கத்தில்

தூங்கு மூஞ்சியோடு ட்ரிம் பண்ணதால என் தாடியை இழக்க நேரிட்டது. அதுதான் இந்த புதிய தோற்றத்திற்கான காரணம். தயவு செய்து யாரும் தூங்கும் போது தாடி ட்ரிம் பண்ணாதீங்க என பின் குறிப்பும் போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க

பாலாஜி முருகதாஸின் பள்ளிப் பருவ புகைப்படத்தை ஷேர் செய்து அப்படியே இருக்கீங்க ப்ரோ.. இந்த லுக் உங்களுக்கு பக்காவா இருக்கு என்றும் ஏதாவது புதிய படத்தில் கமீட் ஆகி இருக்கீங்களா? நியூ லுக் மிரட்டுதே என்றும் ஓணம் வாழ்த்துக்கள் பாலா ரொம்ப அழகா இருக்கீங்க என்றும் ரசிகர்களும் ரசிகைகளும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X