For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விவசாயம் பண்ண போறேன்.. எல்லோரையும் வியக்க வைத்த பாலா.. எல்லாம் ஆரி போட்ட விதையாம்!

  |

  சென்னை: வெளியே போனதும் ஊரில் கொஞ்சம் இடம் வாங்கி விவசாயம் பண்ணப் போறேன் என பாலாஜி முருகதாஸ் சொன்னது டிரெண்டாகி வருகிறது.

  பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிவிட்டது. வெளியே சென்றதும் உங்களுடைய பிளான் என்ன என கமல் கேட்க, ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் கனவுகளை கூறினர்.

  பிக் பாஸ் எடிட்டர் புரமோவில் பண்ண வேலை காரணமாக தேவையில்லாமல், ஷிவானி மற்றும் ரியோ பங்கமாக கலாய்க்கப்பட்டனர்.

  அம்மா நிச்சயம் பெருமைப்படுவாங்க.. 2 வாரத்துக்கு முன்னாடியே வந்திருந்தா.. ஷிவானியை தேற்றிய கமல்!

  உங்க பிளான் என்ன

  உங்க பிளான் என்ன

  இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியப் போகுது. இந்நிலையில், போட்டியாளர்களை பார்த்து கமல், நீங்க வெளியே போனதும் பல கனவுகள் வச்சிருப்பீங்க என்னலாம் பண்ண போறீங்கன்னு டக்கு டக்குன்னு சொல்லுங்க என கேள்வியை முன் வைத்தார்.

  பாடி மசாஜ்

  பாடி மசாஜ்

  வெளியே போனதும், ஒரு நல்ல பாடி மசாஜ் வேணும் சார் என ரம்யா பாண்டியன் சிரித்துக் கொண்டே சொன்னதை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இத்தனை நாட்கள் ஜாலியாக இருந்து விட்டு, கடைசியாக பெண்டு நிமிர ஒரு டாஸ்க் செய்ததற்கு பாடி மசாஜ் கேட்கிறார் ரம்யா என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

  அம்மாவுடன்

  அம்மாவுடன்

  இந்த வாரம் வெளியேறிய ஷிவானி நாராயணன், வெளியேறுவதற்கு முன்பாக கமலிடம் வெளியே போனதும், அம்மா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பேன் என்றார். வேற ஏதாவது பிளான் இருக்கா ஷிவானி என கமல் கேட்க, எதுவுமே பிளான் பண்ணல சார் என மெளன புன்னகையுடன் சொன்னார்.

  விவசாயம் பண்ண போறேன்

  விவசாயம் பண்ண போறேன்

  இங்க வந்ததுல இருந்தே ஆரி பிரதர் விதைச்ச விதை ஒன்னு இருக்கு சார். வெளியே போனதும், ஊர்ல ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி, அதுல விவசாயம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு சார். கண்டிப்பா செய்வேன் என்றார். மேலும், இந்த வீட்ல இருந்த ஸ்ட்ரெஸ்ஸை தணிக்க கோவாவுக்கு ஒரு டூர் போடவும் திட்டம் இருக்கு என்றார்.

  பாராட்டும் ட்ரோலும்

  பாராட்டும் ட்ரோலும்

  விவசாயம் செய்யப் போறேன்னு பாலா சொன்னதை கேட்டு குபீர்னு விழுந்து சிரித்தவர்கள் பலர். ஆரிக்கும் பாலாவுக்கும் எலியும் பூனையுமாக சண்டை நடந்தாலும், ஆரி சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டு பாலா மாறியது சிறப்பு என்று அவரை ஒரு பக்கம் பாராட்டினாலும், விவசாயம்லாம் செய்ய மாட்டார், வேண்டுமென்றால், கோவாவுக்கு போய் சரக்கடிச்சி மட்டையாவார் என்று மறு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  சோம், கேபி பிளான்

  சோம், கேபி பிளான்

  நண்பர்களுடன் மேலும் நேரத்தை நல்லா செலவிட போறேன் சார்.. இங்க வந்து தான் அது எந்த அளவுக்கு முக்கியம்னு கத்துக்கிட்டேன் என்றார். அம்மா கையால சோறு சாப்பிடணும் சார், அப்புறம் என் செல்ல நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டிட்டு போவேன் சார் என சோமசேகர் தனது பிளானை சொன்னார்.

  மனைவிக்கு சமைச்சி கொடுப்பேன்

  மனைவிக்கு சமைச்சி கொடுப்பேன்

  வீட்டுக்குப் போனதும் கொஞ்ச நாட்கள் தனது மகள் ரியாவுடன் நேரத்தை செலவழிக்க திட்டமிட்டு இருக்கேன். மேலும், இந்த வீட்டில் சமைக்க கொஞ்சம் கற்றுக் கொண்டதால், இனி சமையலறையில் மனைவிக்கு நல்லாவே உதவுவேன் எனக்கூறி பாராட்டுக்களை அள்ளினார்.

  வெறுப்பேற்றிய எடிட்டர்

  வெறுப்பேற்றிய எடிட்டர்

  இது தொடர்பான புரமோவில் ரியோ ராஜ், வீட்டுக்குப் போன உடனே நல்லா சாப்பிட்டுட்டு, ஒன் ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு கிளம்பிடணும், ஏதாவது காட்டுக்கு போயிடணும் சார் என்றதை மட்டும் பிக் பாஸ் எடிட்டர் கட் செய்து போட்டு ரியோவை டேமேஜ் செய்து விட்டார். ஆனால், முதலில் குழந்தையை கொஞ்சுவேன் என ரியோ சொன்னதை நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள் எடிட்டரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  English summary
  Balaji Murugadoss wish to do a farming after Bigg Boss life. He really inspired by Aari Arjunan’s word. Other housemates also talks about their plans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X