twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை...அதிரடியான வசனங்கள், காட்சிகள் காரணமா ?

    |

    சென்னை: பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ஒரு வித்யாசமான படத்தை இயக்கி உள்ளார் .

    'பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்' என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர்.

    அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.

    மாற்றவோ அல்லது நீக்கவோ

    மாற்றவோ அல்லது நீக்கவோ

    இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர்.
    ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.

    இதுபோன்ற நிலை

    இதுபோன்ற நிலை

    அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம்.
    சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    தடை விதித்திருப்பது அதிர்ச்சி

    தடை விதித்திருப்பது அதிர்ச்சி

    மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மறுதணிக்கைக்கு

    மறுதணிக்கைக்கு

    இத்தடை குறித்து தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறுகையில் 'சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Read more about: blue sattai maran
    English summary
    Ban in Anti Indian film by Bluesattai Maran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X