இது ராமாயணமா? இல்லை இஸ்லாமியர்களின் கதையா? பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வெடித்தது போராட்டம்!

மும்பை: ஆதிபுருஷ் டீசர் வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியாவில் ஒரே யுத்த காண்டம் தன் நடைபெற்று வருகிறது.

தன்ஹாஜி படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையாக ஆதிபுருஷ் உருவாகி வருகிறது என்றதுமே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

500 கோடி பட்ஜெட் என்றெல்லாம் உருட்டப்பட்ட நிலையில், கடைசியில் அனிமேஷன் பட டீசரை பார்த்ததும் ரசிகர்கள் அப்செட் ஆகி விட்டனர்.

பிரபாஸின் ஆதிபுருஷ்

பிரபாஸின் ஆதிபுருஷ்

பாகுபலி படத்திற்கு பிரபாஸுக்கு ஆதிபுருஷ் படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அனிமேஷன் படம் என்றோ மோஷன் கேப்சர் படம் என்றோ அறிவிக்காமல் திடீரென டீசர் வெளியிட்டு படக்குழு ஏமாற்றி உள்ளனர் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ராவணா கீல்ஜி

ராவணா கீல்ஜி

ஆனால், இப்போ பிரச்சனையே அது இல்லை. சைஃப் அலி கான் பத்து தல ராவணனாக நடிக்கிறார் என்றதுமே எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், தற்போது டீசரில் அவரை ராவணன் போல காட்டாமல் இஸ்லாமியர் போலவே காட்டி உள்ளனர் என்றும் ராவணா கான், ராவணா கீல்ஜி என ஏகப்பட்ட எடிட்டிங் போட்டோவை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

டார்கேரியன்

டார்கேரியன்

ராமாயணத்தில் ராவணன் புஷ்பக விமானத்தில் தான் வருவார். ஆனால், என்ன இது டிராகன் போன்ற ஜந்துகளில் எல்லாம் ஏறி அமர்ந்து வருகிறார். இது என்ன கேம் ஆஃப் த்ரோன்ஸா? சைஃப் அலி கான் டார்கேரியனா? என பாலிவுட் ரசிகர்கள் படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஹனுமானும் சரியில்லையே

ஹனுமானும் சரியில்லையே

ராவணன் கதாபாத்திரத்தை தொடர்ந்து ஹனுமான் கதாபாத்திரமும் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் #BanAdipurush ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த முறை பாய்காட் ஹாஷ்டேக் வேலைக்காகது, தடை ஹாஷ்டேக் தான் சரியாக இருக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.

சீரியலே பெட்டர்

சீரியலே பெட்டர்

பழைய ராமாயண சீரியலே இந்த ஆதிபுருஷுக்கு பல மடங்கு பெட்டர் என ட்வீட்களை போட்டு விளாசித் தள்ளி வருகின்றனர். பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஹிட் ஆகுமா? ஆகாதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X