»   »  ஜெராக்ஸ் மிசினாக மாறுகிறதா தமிழ் சினிமா உலகம்?

ஜெராக்ஸ் மிசினாக மாறுகிறதா தமிழ் சினிமா உலகம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய திரைப்படம் பெங்களூர் டேஸ். அதன் மறு உருவாக்கம் தற்போது தமிழில் படமாக்கப்பட்டு விட்டது. அத்திரைப்படத்தின் பெயரும், சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. ஆனால், ஒரிஜினல் படத்தைபோலவே அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளது அத்தனை காட்சிகளும்.

பெங்களூர் டேஸ் மலையாள படத்தில், துல்கர் சல்மான், பார்வதி, நிவின் பாலி, நஸ்ரியா, பாஹத் பாசில் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் அதேபோல ஆர்யா, பார்வதி, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ரானா டகுபதி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


Bangalore days Tamil version ready

வித்தியாசம் என்னவெனில், 'பெங்களூர் டேஸ்' என்பது தமிழில் 'பெங்களூர் நாட்கள்' என்ற பெயரோடு ரிலீசாக உள்ளது. தமிழ் பெயருக்கு கிடைக்கும் வரி விலக்கு இதற்கு காரணம்.


அதைவிட பெரிய கொடுமை படத்தின் பர்ட்ஸ் லுக் புகைப்படங்கள்தான். மீளுருவாக்கம் செய்வது தப்பில்லை எனினும், இது அச்சு காப்பியாக வந்துள்ளதுதான் ஜீரணிக்க முடியாததாக உள்ளது.


ஆர்யாவின் பைக், ஸ்ரீ திவ்யாவின் கல்யாண பாடல், ஸ்ரீ திவ்யா அணிந்துள்ள உடையின் நிறம் போன்றவை மலையாள வெர்ஷனில் இருந்து அப்படியே காப்பி செய்யப்பட்டுள்ளன.


மலையாள திரைப்படத்தினையும், தற்போது தமிழில் வெளிவந்த புகைப்படங்களையும் ஒன்று சேர வைத்து பார்த்தாலே திரைப்படத்தினை முழுமையாக பார்த்த திருப்தி அடைந்துவிடலாம்.


இதனை உறுதி செய்யும் விதமாகவே படத்தின் டீசரும் உள்ளது. வசனங்கள் அப்படியே பொருந்துகிறது. இதுபோலவே இனிவரும் எல்லா திரைப்படங்களும் காப்பி கலாச்சாரத்தை ஆரம்பித்தால் தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் குறைய வெகுவாக வாய்ப்புள்ளது.


பாபநாசம் தொட்டு, தற்போது மலையாள படங்களை தமிழில் ரீமேக் செய்ய தொடங்கியுள்ளது டிரெண்டாகியுள்ளது. மலையாள ஹிட் படமான, பிரேமம் விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அப்படத்தின் ரீமேக்காவது, காப்பியடிக்காததை போல இல்லாமல் நேட்டிவிட்டியோடு பொருந்திப்போனால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.


மற்றமொழழி திரைப்படங்களும் அதன் தமிழ் மீளுருவாக்கமும் தமிழக ரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன. ஆனால், ரீமேக் செய்ய வருகின்றவர்கள் தங்களது ஜெராக்ஸ் மிசினை வைத்துவிட்டு வருவது படைப்பாளிகளுக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்.

English summary
Bangalore days Tamil version set to ready for release with the same type of visualization.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil