‘லால் சிங் சத்தா’ வசூலே சூப்பரா இருக்கு, இதுல இதுவேறயா?: சிக்கிய சிலர், தட்டித் தூக்கிய போலீஸார்
பெங்களூரு: அமீர்கான், கரீனா கபூர், நாக சைத்தன்யா நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், 'லால் சிங் சத்தா' படத்திற்கு பெங்களூருவில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லால் சிங் சத்தா
ஹாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, பலவருட போராட்டத்திற்குப் பின்னர் அமீர்கான் கைப்பற்றினார். அதுவே அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர், நாக சைத்தன்யா நடிப்பில் ‘லால் சிங் சத்தா' படமாக உருவாகியது. இந்தப் படம் வெளியாகும் முன்னர் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், அமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினரும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பரபரப்பாக இருந்தனர்.

பாய்காட் சிக்கலில் அமீர்கான்
'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்ப்பையும் மீறி சூப்பர் ஹிட் அடிக்கும் என பலரும் நம்பினர். ஆனால், நெட்டிசன்களால் அமீர்கான் தொடர்ந்து பாய்காட் செய்யப்பட்டார். சில வருடங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்த சில அரசியல் ரீதியான கருத்துகள், இப்போது வினையாகிப் போனது. இதனால், ‘லால் சிங் சத்தா' படத்தின் வெற்றி கேள்விக்குள்ளானது. இறுதியில் அதுவே உண்மையும் ஆகிப் போனது.

வசூலில் தடுமாற்றம்
அமீர்கான் படங்கள் என்றாலே அது வெளியான முதல் வாரம் வசூலில் சக்கைப் போடு போடும். ஆனால், லால் சிங் சத்தா படம் ரொம்பவே தடுமாறியது. தொடர்ச்சியாக ‘லால் சிங் சத்தா' படத்தை புறக்கணிக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் ட்ரோல் செய்தபடி இருந்தனர். இதனால், 50 கோடி ரூபாய் வசூலை கடக்கவே பெரும்பாடுபட்டது ‘லால் சிங் சத்தா.' இந்த நிலையில், தற்போது 'லால் சிங் சத்தா' படத்துக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

இணையத்தில் கசிந்த லால் சிங் சத்தா
லால் சிங் சத்தா படம் திருட்டுத்தனாக இணையதளங்களில் வெளிவருவது குறித்து, வயாகாம்18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிலரை கடந்த 12-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ‘லால் சிங் சத்தா' படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்தது உறுதியானது.

தமிழ் ராக்கர்ஸ் குழுவா?
மேலும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் ராக்கர்ஸ், பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இணையத்தில் படங்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











