Just In
- 28 min ago
சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!
- 40 min ago
ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!
- 2 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 3 hrs ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
Don't Miss!
- Automobiles
விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?
- Education
ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
உச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்..!
- News
"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்!
- Sports
அத்தனை பேர் இருந்தும்.. நடராஜனை கூப்பிட்டு கோப்பையை கொடுத்த ரஹானே.. இதுதான் காரணம்.. செம்ம!
- Lifestyle
தைராய்டு பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த யோகாசனங்களை செய்யுங்க...
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
varma updates- த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல!

சென்னை: புதிதாக எடுக்கப்படவுள்ள வர்மா படத்தில் த்ருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் அர்ஜூன்ரெட்டி. இப்படத்தினை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். பாலா இயக்கிய இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.
இம்மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென வர்மா படத்தை பாலா எடுத்ததில் திருப்தியில்லை என அறிவித்தது அப்படத்தைத் தயாரித்துள்ள இ4இ நிறுவனம்.

மீண்டும் வர்மா:
இதனால் மீண்டும் வர்மா படத்தை வேறு ஒரு இயக்குநரை வைத்து படமாக்க முடிவு எடுத்திருப்பதாகவும் அது அறிவித்தது. அப்புதிய படத்தில் நாயகன் த்ருவ் தவிர மற்ற அனைவரும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
|
நாயகி அறிவிப்பு:
புதிதாக வர்மா படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. இந்நிலையில், வர்மா படத்தில் த்ருவிற்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இ4இ நிறுவனம்.

பாலிவுட் நடிகை பனிதா:
இது தொடர்பாக அதன் தயாரிப்பாளர் முகேஷ் ஆர் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதிய வர்மா படத்தில் த்ருவிற்கு ஜோடியாக பனிதா சந்து என்ற பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவரான பனிதா, அக்டோபர் என்ற இந்திப் படத்தில் நடித்தவர்.

ஜான்வி:
இதற்கிடையே மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, வர்மா படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் நாயகி பெயரை அறிவித்துள்ளது.

மேகா சௌத்ரி:
முன்னதாக வர்மா படத்தில் நாயகியாக மேகா சௌத்ரி நடித்திருந்தார். வர்மா படம் கைவிடப்பட்ட தகவல்கூட அவருக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை என அவர் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரையே மாற்றி வேறொரு நாயகியை படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.