twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரகுவரன் வாய்ஸ்ல நான் பேசுறேனா? - ஆச்சரியப்படும் கைதி வில்லன் அர்ஜுன் தாஸ்

    |

    சென்னை : தீபாவளிக்கு வெளியான "கைதி" திரைப்படத்தில் கார்த்தியை எதிர்த்து சரியான டஃப் கொடுத்தவர் அர்ஜுன் தாஸ். அவரின் திரை வாழ்வு இந்த திரைப்படம் மூலம் மிரட்டலோடு ஆரம்பித்துள்ளது.

    ஒரு ஆர். ஜே வாக இருந்த அர்ஜுன் தாஸிற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது. கைதி திரைப்படத்தை தவிர அர்ஜுன் தாஸ் பிரபு சாலமன் இயக்கத்தில் 'கும்கி 2' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்னாராஜன் இயக்கத்தில் அந்தகாரம்' படத்துல லீட் ரோலில் நடித்துள்ளார். இதற்கு முன்னரே கைதி படம் வெளியாகிவிட்டது.

    Bank employee now turned to be a villan

    தீபாவளிக்கு ஒரு ரசிகனாக தியேட்டர்ல போய் ஸ்டார் நடிகர்களோட படத்தை பார்த்து ரசித்த அர்ஜுன் தாஸ் இன்று தான் நடித்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியானது எவ்வளவு மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

    சிறுவயது முதலே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் துபாயில் தான் செய்து வந்த வங்கி வேலையை கூட உதறித்தள்ளிவிட்டு கூத்து பட்டறையில் பயின்றவர். குடும்பத்தின் விருப்பம் இல்லாமல் சினிமா வாய்ப்பு தேடி வாய்ப்பு கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று ரேடியோ ஒன் எஃப்.எம்-ல ஆர். ஜே வாக சேர்ந்துள்ளார்.

    Bank employee now turned to be a villan

    எங்கெல்லாம் ஆடிஷன் நடக்கிறதோ அங்கெல்லாம் நிச்சயம் அர்ஜுன் முதலில் ஆஜர். அப்படி ஒரு வாய்ப்பு தான் நடிகர் அபிஷேக் ராஜா மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அவர் கைதி படம் எடுக்க உள்ளார் என்பது பற்றி தெரியாமலேயே அவரை அணுகியுள்ளார் அர்ஜுன். இப்படி கிடைத்த வாய்ப்பு தான் கைதி படத்தில் கார்த்திக்கு எதிரான அன்பு என்ற வில்லன் கதாபாத்திரம்.

    Bank employee now turned to be a villan

    கைதி பட குழுவினர் நடிகர் கார்த்தி உட்பட அனைவருக்கும் நெருங்கிய நண்பரானார் அர்ஜுன் தாஸ். இதுவரையில் அவர் ஆர். ஜே வாக இருந்த போது கூட யாரும் அவரின் ரகுவரன் சாயலில் இருக்கும் குரலை சுட்டிக்காட்டியதில்லை. ஆனால் கைதி படக்குழுவினர் அனைவரும் முதல் நாளில் இருந்து இதை கூறியுள்ளார்கள். மேலும் கைதி படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் அன்பு கதாபாத்திரத்தின் ரகுவரன் போன்ற குரலை பற்றி பாராட்டியுள்ளனர்.

    "பிரீ அட்வைஸ் யாரும் கொடுக்க வேண்டாம்" - ரசிகருக்கு சாக்ஷி பதிலடி

    கைதி பட வெற்றிக்கு பிறகு அர்ஜுன் தாஸின் குடும்பத்தினர் கூட மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பட வாய்ப்பு சிறப்பாகவும் வெற்றியாகவும் அமைந்ததால் அர்ஜுனிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் வித்யாசமான நல்ல ஒரு கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனத்துடன் படத்தினை தேர்வு செய்து வருகிறார் அர்ஜுன் தாஸ்.

    தளபதி 64 மற்றும் கைதி 2 படத்தில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது இதுவரையில் தெரியவில்லை. கூடிய விரைவில் வெளிவரும்.அதுவரையில் காத்திருப்போம்.

    English summary
    Arjun das who featured the character of anbu, villian in deepavalai release movie kaidhi turns out to be great success. From his childhood age his ambition was to enter into a cine field. Hs dream has now come true.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X