»   »  ரூ 62 கோடி கடன் பாக்கி... சொந்த ஸ்டியோவுக்குள் நுழைய நாகார்ஜுனாவுக்கு தடை!

ரூ 62 கோடி கடன் பாக்கி... சொந்த ஸ்டியோவுக்குள் நுழைய நாகார்ஜுனாவுக்கு தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரூ 62 கோடி கடன் பாக்கிக்காக நடிகர் நாகார்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணை ஸ்டுடியோவை பறிமுதல் செய்துள்ளன வங்கிகள்.

இதைத் தொடர்ந்து அந்த ஸ்டுடியோவுக்குள் நுழைய நாகார்ஜூனா உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Banks seized Nagarjuna's Annapoorna Studio

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜூனா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்.

இவருக்கு சொந்தமான அன்னப்பூர்ணா ஸ்டூடியோ ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. இது 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஸ்டூடியோ பங்குதாரர்களாக நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் வெங்கட் அக்கினேனி, சுப்ரியா, சுரேந்திரா, நாகா சுசீலா, வெங்கட் ரோத்தம் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஸ்டூடியோ மீது ரூ 32.3 கோடியை ஆந்திரா வங்கியிலும், 29.7 கோடியை இந்தியன் வங்கியிலும் கடனாகப் பெற்றிருந்தார் நாகார்ஜூனா.

வங்கிகளின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகும் இந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் அன்னபூர்ணா ஸ்டூடியோ முழுவதையும் பறிமுதல் செய்ததாக அறிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழையவோ, வர்த்தக ரீதியில் செயல்படவோ, வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

English summary
Indian Bank and Andhra Bank have slapped notices on Annapoorna Studios, promoted by actor-entrepreneur Akkineni Nagarjuna, over dues to the tune of about Rs 62 crore
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil