»   »  தாடி வைத்த விஜய் பாத்திரம்தான் மெர்சலாக இருக்கும்! - அட்லீ

தாடி வைத்த விஜய் பாத்திரம்தான் மெர்சலாக இருக்கும்! - அட்லீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் படத்தின் ஹைலைட்டே தாடி வைத்த விஜய்யின் 50 நிமிடக் காட்சிகள்தான் என இயக்குநர் அட்லீ கூறியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வரவிருக்கும் படம் மெர்சல்.

Beard Vijay is the highlight of Mersal

நேற்று மீடியா நிருபர்களைச் சந்தித்த அட்லீ, மெர்சல் படத்தில் விஜய்யின் பாத்திரம் குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், "இந்தப் படத்தில் தாடி வைத்த விஜய்யின் பெயர் தளபதி. அவரை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை வைக்கவில்லை. ஒரு பவர்ஃபுல் பெயர் வேண்டும் என்பதற்காக வைத்தோம்," என்றார்.

படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார். அது இரண்டு வேடங்களா, மூன்று வேடங்களா என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிறார் அட்லீ.

Beard Vijay is the highlight of Mersal

மெர்சல் படம் விஜய்யின் கேரியரிலேயே மிகப் பெரிய பட்ஜெட் படமாக வெளியாகிறது. ரூ 140 கோடியை இந்தப் படம் வசூலித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தயாரிப்பாளர் சொந்தமாக இந்தப் படத்தை வெளியிடுவதால், மொத்த ரிஸ்கும் அவருக்குதான்.

English summary
Director Atlee revealed that the fifty minutes portion of bearded Vijay character in Mersal will be the major highlight
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil