பீஸ்ட் படத்தை சுற்றி கிளம்பும் பிரச்சனைகள்.. புதுச்சேரியில் அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம்!

சென்னை: நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு புதிது புதிதாய் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.

Recommended Video

புதுச்சேரி: 'பீஸ்ட்' படத்துக்கு தியேட்டரில் கூடுதல் கட்டணம்.. நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்!

விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் இப்படி அவரது படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், படம் வெளியானதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூலம் அனைத்திற்கும் பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் விஜய் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம் நடத்தியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

புதன்கிழமை ரிலீஸ்

புதன்கிழமை ரிலீஸ்

வரும் 13ம் தேதி புதன்கிழமை நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என வழக்கம் போல திருவிழா மோடுக்கு மாறி உள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் வைத்த பேனரை அகற்றியது பிரச்சனையை கிளப்பி உள்ளது.

புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு

நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேற லெவலில் டிரெண்டாகின. இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். மேலும், விஜய்யின் பீஸ்ட் பட பேனர்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

பேனர் அகற்றம்

பேனர் அகற்றம்

அரசியல் கட்சியினரின் பேனரை அகற்றாமல் எங்கள் பேனரை ஏன் அகற்றினீர்கள் லஞ்சம் வாங்குகிறீர்கள் என பீஸ்ட் படத்தின் பேனரை அகற்றிய நிலையில், விஜய் ரசிகர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 13ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் கட்டவுட் வைத்து வருகின்றனர்.

ரசிகர்கள் வாக்குவாதம்

ரசிகர்கள் வாக்குவாதம்

இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்டவுட்டுக்கு அனுமதி இல்லை என கொம்யூன் அதிகாரிகள் அதனை அகற்றியுள்ளனர். இதனை பார்த்த கட்டவுட் வைத்த ரசிகர்கள் அதனை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகளின் கட்டவுட்கள் வைக்கும் போது மட்டும் ஏன் அகற்றவில்லை அப்போது அவர்களிடம் லஞ்சம் வாங்குகிறீர்களா, எங்களிடம் சொல்லிவிட்டுதான் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீஸ்ட் படத்துக்கு தடை

பீஸ்ட் படத்துக்கு தடை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகளுடன் விஜய் சண்டை போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கு எதிராக குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் ரிலீஸ் ஆவதற்குள் இன்னும் என்னவெல்லாம் பிரச்சனைகள் கிளம்புமோ வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X