சோலோவா அத்தனை தியேட்டரில் வெளியாகியும் வலிமை நிலைமை இதுதான்.. அப்போ துணிவு.. வாரிசை வெல்லுமா?

சென்னை: மாயாஜால் தியேட்டரின் டாப் 10 வெளியானது மட்டுமின்றி ஏகப்பட்ட பெரிய திரையரங்குகளிலும் அதிக ஃபுட் ஃபால் உடன் வலிமை படத்தை பந்தாடி இருக்கிறது விஜய்யின் பீஸ்ட்.

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான வலிமை படம் சுமார் 200 கோடி வெளியானதாக சொல்லப்பட்டது. ஆனால், பல திரையரங்குகள் வலிமை பெரிதாக வசூல் செய்யவில்லை என அடித்து நொறுக்கி வருகின்றனர்.

அதே நேரம் கேஜிஎஃப் 2 படத்துடன் மோதிய விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மாயாஜால் உள்ளிட்ட பல திரையரங்குகளில் அதிக ஃபுட் ஃபால் உடன் முன்னணியில் உள்ளது விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

8வது இடத்தில் அஜித்

8வது இடத்தில் அஜித்

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் சென்னையின் முக்கிய மல்டி பிளக்ஸ் தியேட்டரான மாயாஜால் தியேட்டரின் டாப் 10 பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. டிராக்கர்கள், தயாரிப்பாளர்கள் சொல்வதை விட தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிடும் பட்டியலையே ரசிகர்கள் தற்போது பெரிதும் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் அதிக ஃபுட் ஃபால் பற்றிய தரவுகள் அவர்களிடம் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4வது இடத்தில் விஜய்

4வது இடத்தில் விஜய்

முதல் நாளே அதிக ஷோக்களை போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் படம் பார்க்க வைக்கும் மாயாஜால் மல்டிபிளக்ஸில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் 4வது இடத்தை பிடித்ததை அறிந்த விஜய் ரசிகர்கள் விஜய் தான் கெத்து என கொண்டாடி வருகின்றனர்.

வலிமை vs பீஸ்ட்

வலிமை vs பீஸ்ட்

இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அப்படி இருந்தும் வலிமை படத்தை விஜய்யின் பீஸ்ட் வசூல் ரீதியாக முந்தியுள்ளது. தமிழ்நாடு அளவில் மேலும், பல தியேட்டர்களில் பீஸ்ட் திரைப்படம் டாப்பிலும், சில திரையரங்குகளில் அஜித்தின் வலிமை படம் அதிக கலெக்‌ஷன்களையும் பெற்றுள்ளது.

நேரடி மோதல் என்னாகுமோ

நேரடி மோதல் என்னாகுமோ

இந்த ஆண்டு வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் நிலைமை இப்படி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே நேரடியாக மோத உள்ள நிலையில், அஜித்தின் துணிவு படத்துக்கு பெரும் சிக்கல் இருப்பதாக டிராக்கர்கள் கணித்துள்ளனர்.

அதிக தியேட்டர்கள்

அதிக தியேட்டர்கள்

தமிழ்நாட்டில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களுக்கு சம அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை தாண்டி இந்தியளவில் மற்றும் சர்வதேச அளவில் விஜய்யின் வாரிசு படத்துக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளதாகவும் தியேட்டர் டிக்கெட்டுகளும் அசுர வேகத்தில் புக் ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யார் நம்பர் 1

யார் நம்பர் 1

நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகர் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது பரபரப்பை கிளப்பிய நிலையில், வரும் பொங்கல் கிளாஷில் உண்மையாகவே அஜித் மற்றும் விஜய் இருவரில் யார் டாப் என்பது வசூல் ரீதியாக தெரிந்து விடும் என ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X