துப்பாக்கி சத்தம் தெறிக்க விடுதே... உச்சகட்ட டென்ஷன் ஏற்றும் பீஸ்ட் டீம்
சென்னை : விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசாக இன்னும் ஒருநாள் மட்டுமே மீதம் உள்ளதால், அடுத்தடுத்த ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு அதிகரிக்க வைத்து வருகிறார்கள் பீஸ்ட் படக்குழுவினர்.
பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதால், சன் பிக்சர்ஸ் தொடர்ந்து ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பீஸ்ட் டிரைலர், மூன்றாவது சிங்கிள் படத்தின் கதையை சொல்வதாக இருந்தாலும், இதில் விஜய்யின் அதிரடி காட்சிகளை பார்த்து, படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது தான் பீஸ்ட் கதை
முக்கியமான மால் ஒன்றை கைப்பற்றி, அதில் உள்ளவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அரசிடம் பேரம் பேசி, மிரட்டுகிறார்கள் தீவிரவாதிகள். அதே மாலிற்குள் இருக்கும் ரா ஏஜன்டான விஜய்யிடம் தகவல் சொல்லி, மக்களை காப்பாற்ற சொல்கிறார்கள். தீவிரவாதிகளிடம் இருந்து தனி ஆளாக எப்படி விஜய், மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை என்பது தெரிகிறது.

விஜய்யின் கலக்கல் பேட்டி
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சனங்கள் ஒரு புறம் எழுந்தாலும், இதை கொண்டாட ரசிகர்கள் தவறவில்லை. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்கிளும் படத்தின் கதை இது தான் என்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் ப்ரோமோஷனுக்காக நேற்று சன் டிவியில் விஜய்யின் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அடுத்தடுத்து வரும் ப்ரோமோ
விஜய்யின் பேட்டி ஒளிபரப்பாவதை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று டிவி வெர்சனாக மற்றொரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஊரின் மையத்தில் உள்ள மாலை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளார்கள் என ஒருவர் சொல்ல, கூலாக சூயிங்கம் மென்றபடி என்ட்ரி கொடுக்கிறார் விஜய். அதற்கு பிறகு ப்ரோமோ வீடியோ முழுவதும் துப்பாக்கி சத்தம் மட்டும் தான் கேட்கிறது.

எப்போப்பா பட ரிலீஸ்
இதனால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பது தெளிவாகி உள்ளது. படம் எப்போது ரிலீசாகும், விஜய்யின் முழு ஆக்ஷன் காட்சிகளையும் எப்போது பார்க்க போகிறோம் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வரும் ப்ரோமோக்கள் படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications











