விஜய் ஃபேன்ஸ் ரெடியாகுங்க....Beast Mode ஆரம்பமாகிடுச்சு... இன்று முக்கிய அப்டேட் வருது
சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்பட உள்ளதாக ஸ்பெஷல் வீடியோவுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதனால் என்ன அப்டேட் என தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
Recommended Video
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டைட்டிலுடன் ஜுலை மாதம் வெளியிடப்பட்டன.

லீக்கான ஷுட்டிங் வீடியோ
அதற்கு பிறகு ஜார்ஜியா, டில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் போல் செட் அமைக்கப்பட்டு, முக்கிய சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டன. இதன் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம பரபரப்பாகின. அதன் பிறகு பீஸ்ட் படம் பற்றிய அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டன.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்
பீஸ்ட் படத்தின் 100 வது நாள் ஷுட்டிங் போட்டோ வெளியானதில் இருந்தே படம் பற்றி அப்டேட் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ஆனால் எந்த அப்டேட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின. ஆனால் அப்படி எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் விடாமல் அப்டேட் கேட்டு #BeastUpdate ஹேஷ்டேக்கை ரசிகர்கள் அவ்வப்போது டிரெண்டிங் ஆக்கி வந்தனர்.

வெளியான தகவல்
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்து விட்டதாகவும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஏப்ரங் 14 ம் தேதி பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விக்கிபீடியா உள்ளிட்டவற்றில் குறிப்பிடப்பட்டது. இந்த படத்தில் செல்வராகவன் வில்லன் இல்லை. அரசியல்வாதி ரோலில் நடித்துள்ளதாகவும் கூறினார்கள்.

இன்று பீஸ்ட் அப்டேட் வருது
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் அப்டேட் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இருட்டில் விஜய் இருப்பது போலவும், நீண்ட துப்பாக்கி வந்து ரோல் ஆகி Beast mode on என குறிப்பிட்டு, இன்று மாலை அப்டேட் என காட்டும் வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த துப்பாக்கியின் மீது 65% என காட்டப்பட்டு, கீழே பீஸ்ட் அப்டேட் என குறிப்பிடப்படுகிறது.

அப்படி என்ன அப்டேட்
இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன அப்டேட்டாக இருக்கும்...65 சதவீதம் அப்டேட் என்றால் ரிலீஸ் தேதி சொல்ல போகிறார்களா என பலர் கேட்டுள்ளனர். ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட் சிங்கிள் போன்றவைகளும் அடுத்தடுத்து வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











