பீஸ்ட் படத்தில் ‘ரா’ ஏஜென்ட்டா விஜய்? இந்திக்கு மட்டும் அந்த டைட்டில் ஏன்? புரமோஷன் எப்போ?
சென்னை: அஜித்தின் வலிமை திரைப்படம் 200 கோடி வசூல், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் 100 கோடி பிளஸ் வசூல் தாண்டிய நிலையில், கோலிவுட் அடுத்து பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது விஜய்யின் பீஸ்ட் படத்தை தான்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி வெர்ஷனுக்கு மட்டும் 'Raw' என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

5 மொழிகளில் பீஸ்ட்
பான் இந்தியா ஃபீவர் தென்னிந்திய மொழி படங்களை தொற்றிக் கொண்டது. டோலிவுட் படங்களை போல கோலிவுட்டிலும் பான் இந்தியா படங்களை கொடுக்க வேண்டும் என முன்னணி நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். முறையாக மற்ற மொழிகளில் நடிகர்களே டப் செய்யவில்லை என்றாலும், டப்பிங் படமாக மற்ற மொழிகளில் வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.

முந்தும் சன் பிக்சர்ஸ்
அதுமட்டுமின்றி ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அனைத்து ஏரியாக்களிலும் தியேட்டர்களை அதிகப்படியாக கைப்பற்றும் போட்டியில் சன் பிக்சர்ஸ் முந்திக் கொண்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் எடுத்துக் கொண்ட நிலையில், தெலுங்கு தியேட்டர்கள் அதிகரிப்பை தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜு பார்த்துக் கொள்கிறாராம்.

இந்தியில் மட்டும் ஏன்
பீஸ்ட் எனும் ஆங்கில தலைப்பில் தான் படம் எல்லா மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில், இந்தி வெர்ஷனுக்கு மட்டும் 'Raw' என ஏன் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. மாஸ்டர் படத்துக்கும் விஜய் தி மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரா ஏஜென்ட்டா
இந்த டைட்டில் மூலம் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் ரா ஏஜென்ட்டா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னாள் ரா ஏஜென்ட்டாக வருவாரா? அல்லது படம் முழுக்கவே அண்டர்கவர் ஆபிஸரா? என்றும் ஏகப்பட்ட கேள்விகளும் யூகங்களும் கிளம்பி உள்ளன.

புரமோஷன் பண்ணுங்க
5 மொழிகளில் வெளியாகிறது என வெறும் அறிவிப்பு மட்டும் விட்டால் போதாது. இந்தி மார்க்கெட்டை பிடிக்க வேண்டுமென்றால், நடிகர் விஜய்யை வைத்து அங்கே போய் புரமோஷன் பண்ணுங்க என சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ராஜமெளலி பண்ண மாஸ் புரமோஷனை பார்த்து மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கோலிவுட்டிலேயே இசை நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. எப்படி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை சன் பிக்சர்ஸ் திட்டமிடும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











