5 மொழிகளில் ரிலீசாகும் பீஸ்ட்...போஸ்டர் கூட ரெடி...அடுத்து என்ன?
சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாம். இதற்கான போஸ்டர்கள் இன்று வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து டாப் ஸ்டார்கள் நடிக்கும் மாஸ் ஹிட் படங்களை தயாரித்து வருகிறது. அண்ணாத்த, எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்துள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தை போலவே உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தையும் பல மொழிகளிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

5 மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ்
ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள பீஸ்ட் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமம் தெற்கு, வடக்கு என இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மிக அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் விநியோக உரிமத்தை வாங்கி உள்ள நிறுவனங்கள் அதனை முறைப்படி தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்துள்ளன.

எந்த மொழியில் யார் வெளியிடுகிறார்
தமிழகத்தில் பீஸ்ட் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் வாங்கி உள்ளது. தெலுங்கு வெளியீட்டு உரிமத்தை தளபதி 66 பட தயாரிப்பாளரான தில் ராஜு வாங்கி உள்ளார். கன்னட வெளியீட்டு உரிமத்தை தீரஜ் என்டர்பிரைசசும், வெளிநாட்டு விநியோக உரிமத்தை ஐங்கரன் நிறுவனமும் வாங்கி உள்ளன. பீஸ்ட் படம் மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் செம உற்சாகமாகி உள்ளனர்.

அசத்தலான போஸ்டரும் வந்தாச்சு
பீஸ்ட் பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் விதமாக புதிய போஸ்டர்கள் 5 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. நரைத்த லேசான தாடியுடன் இருக்கும் விஜய், அவர் அருகே கையில் துப்பாக்கியுடன் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் ராணுவ வீரர்கள் என இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் பீஸ்ட்
ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா தாஸ், செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லே, சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீஸ்ட் படத்திற்கான ரிலீஸ் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

டீசர் எப்போப்பா வரும்
மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் பீஸ்ட் டீசர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ட்விட்டரில் BeastTeaser என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் முதல் வாரத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டே பீஸ்ட் டீசர் வெளியிடப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











