தளபதியுடன் மோதும் தல...பீஸ்ட் பொங்கலா ? வலிமை பொங்கலா ?

சென்னை : விஜய்யின் பீஸ்ட் படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது அஜித்தின் வலிமை. இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் வலிமை படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த உடன் மோதல்

அண்ணாத்த உடன் மோதல்

படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. தீபாவளிக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதனால் ரஜினியின் அண்ணாத்த படத்துடன், அஜித்தின் வலிமை மோத உள்ளதாக கூறப்பட்டது. தீபாவளிக்கு வலிமை படத்தை ரிலீஸ் செய்தால் அது படத்தின் வசூலை பாதிக்கும் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

இதனால் படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய போகிறார்கள். கிறிஸ்துமசுக்கு ரிலீஸ் செய்ய போகிறார்கள் என பலவிதமாக கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள், படத்தின் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணுங்க என போனி கபூரிடம் கேட்டு வந்தனர். இதனால் வலிமை ரிலீஸ் எப்போ என அனைவரும் எதிர்பார்க்க துவங்கினர்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

வலிமை படத்தின் டீசர் நாளை ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் சர்ப்ரைஸ் அப்டேட்டாக, வலிமை படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். வலிமை டீசர் நாளை வருகிறது என செய்தி வெளியானதுமே ட்விட்டரில் வலிமை தொடர்பாக ஹாஷ்டாகுகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீசையும் போனி கபூர் அறிவித்ததும் வலிமையை மீண்டும் டிரெண்டிங் ஆக்கி விட்டனர்.

தல-தளபதி மோதல்

தல-தளபதி மோதல்

ஏற்கனவே விஜய் - அஜித் ரசிகர்கள் அனைத்திற்கும் மோதிக் கொள்வார்கள். வலிமை ஃபஸ்ட்லுக் வெளியானதுமே, போட்டிக்காக விஜய் ரசிகர்கள் கத்தி மோஷன் போஸ்டரை டிரெண்டிங் ஆக்கினர். அதைத் தொடர்ந்து வலிமை ஃபஸ்ட் சிங்கிள் வெளியானதும், விஜய்யின் மாஸ்டர் ஃபஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலின் சாதனையை வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடல் முறியடிக்க தவறியதாகவும் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.

மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

இந்நிலையில் வரும் பொங்கலுக்கு விஜய்யின் பீஸ்ட் படமும், அஜித்தின் வலிமை படமும் ரிலீசாக போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் - அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இரு ஸ்டார்களின் படங்கள் தொடர்பான ஹாஷ்டாகுகளை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். பீஸ்ட் பொங்கலா, வலிமை பொங்கலா என மோதிக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X