சென்னை : 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே கவனிக்கப்பட்ட நடிகைகளாகத் திகழ்ந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற அறிமுக நடிகைகளைக் குறிப்பிட்டு இந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை யார் என நமது தள வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
'அருவி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன் ரசிகர்களின் பேராதரவை பெற்று சிறந்த அறிமுக நடிகையாக தேர்வாகி இருக்கிறார்.
அறிமுக நடிகைகள்
இப்போதெல்லாம் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களும் உடலை வருத்தி கடினமான பாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பணம், புகழ் சம்பாதிப்பதைத் தாண்டி நல்ல நடிகை எனப் பெயர் பெறுவதற்காக ஹீரோயின்கள் துணிச்சலாகப் போராடுகிறார்கள்.
அறிமுக நடிகைகள் 2017
'காதல் கண்கட்டுதே' அதுல்யா, 'ப்ருஸ்லீ' கீர்த்தி கர்பந்தா, 'ஒரு கிடாயின் கருணை மனு' ரவீணா, 'ரங்கூன்' சனா மக்பல், 'வனமகன்' சாயிஷா, 'இவன் தந்திரன்', 'விக்ரம் வேதா' ஸ்ரத்தா ஸ்ரீநாத், 'மீசைய முறுக்கு' ஆத்மியா, 'மேயாத மான்' ப்ரியா பவானி ஷங்கர், 'அருவி' அதிதி பாலன், 'சக்க போடு போடு ராஜா' வைபவி சாண்டில்யா ஆகியோர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.
நாயகிகளுக்கு நம்பிக்கை
இவர்களில் சிலருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் படங்களும் தற்போது வரவேற்பைப் பெற்று வருவது புதுமுக நடிகைகளுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற நடிகைகள் 4 பேரை கருத்துக்கணிப்புக்கு எடுத்துக்கொண்டோம்.
சிறந்த அறிமுக நடிகை 2017
40.31% வாசகர்களின் வாக்குகளைப் பெற்று 'சிறந்த அறிமுக நடிகை 2017' ஆகத் தேர்வாகியிருக்கிறார் 'அருவி' ஹீரோயின் அதிதி பாலன். வக்கீல் படித்திருக்கும் அதிதி முதல் படத்திலேயே எடை குறைத்து நடித்து அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகை எனும் பெயர் பெற்றிருக்கிறார். ரசிகர்கள் தொடங்கி சூப்பர்ஸ்டார் வரை அதிதியைப் பாராட்டியது இந்தாண்டு ஹைலைட்.
அதிதி பாலன்
'அருவி' கேரக்டராகவே வாழ்ந்த அதிதியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரே படத்தின் மூலம் ஓஹோவென வரவேற்பைப் பெற்ற அதிதி கடந்த ஆண்டின் ஆகச்சிறந்த புது வரவு. டிசம்பர் மாதம் முழுவதும் எல்லா சேனல்களிலும் இன்டர்வியூ கொடுத்தபடி இருந்தார் அதிதி.
பிரியா பவானி ஷங்கர்
வாசகர்களின் 33.05% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என சின்னத்திரையில் கலக்கி 'மேயாத மான்' படத்தின் வழியாக வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி ஷங்கர் க்யூட் நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்த ஆண்டும் இவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
சாயிஷா சைகல்
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயிஷா சைகல் 15% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 'வனமகன்' படத்தில் செம டான்ஸ், அசத்தல் பெர்ஃபார்மன்ஸ் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த சாயிஷா விஜய் சேதுபதியோடு 'ஜுங்கா', ஆர்யாவோடு 'கஜினிகாந்த்', கார்த்தியோடு ஒரு படம் என இப்போது செம பிஸி.
ஆத்மிகா
'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் அறிமுகமான ஆத்மிகா 11.67% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். கோவையைச் சேர்ந்த ஆத்மிகா ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி ஆதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். படங்களில் பாடவும் வாய்ப்புத் தேடி வரும் ஆத்மிகா, அரவிந்த்சாமியின் 'நரகாசுரன்' படத்திலும் நடித்து வருகிறார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.
Related Articles
மெர்சலாக ஈர்த்த ஸ்ரேயா கோஷல் தான் நம்பர் ஒன்! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
இசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
சிறந்த இசையமைப்பாளர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
செம ஆதரவு பெற்ற விஜய் சேதுபதி... சிறந்த நடிகர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
2017-ன் சிறந்த படம் எது தெரியுமா? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸா? ட்ரீம் வாரியர் பிக்சர்ஸா? வாசகர்களின் தேர்வு இதோ.. #BestOfTamilCinema2017
கடந்த ஆண்டின் மனங்கவர்ந்த நாயகி! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
குருவை மிஞ்சும் சிஷ்யன்... 'மெர்சல்' எடிட்டர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
2017-ன் சிறந்த ஒளிப்பதிவாளர் யார்? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
2017-ன் சிறந்த அறிமுக இயக்குநர் யார்..? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
சிறந்த இயக்குநர் 2017 யார்? மெர்சல் டைரக்டர் எந்த இடம்? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
வாசகர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த காமெடியன் 2017! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிகழும் அதிசயம்... ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!