»   »  கடந்த ஆண்டின் மனங்கவர்ந்த நாயகி! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

கடந்த ஆண்டின் மனங்கவர்ந்த நாயகி! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர்கள் யார் என வெவ்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

வாசகர்களின் வாக்குகளின்படி 2017-ம் ஆண்டின் சிறந்த நாயகியாக தேர்வாகியிருக்கிறார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.

ரசிகர்களின் மனங்கவர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நாயகிகள் யார் எனப் பார்க்கலாம்.

ஹீரோயின்

ஹீரோயின்

கடந்த வருடத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலோச்சிவரும் சீனியர் நயன்தாரா முதல், அறிமுக நடிகைகள் வரை பலரும் தத்தமது நடிப்புத் திறமையால் கவனம் ஈர்த்தார்கள். அவர்களில் இருந்து அதிகமாகப் பாரட்டுகள் குவித்த ஓரிருவரைத் தேர்ந்தெடுப்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்குமே சிக்கலான காரியமாகத்தான் இருந்தது.

மனம்கவர்ந்த ஹீரோயின் 2017

மனம்கவர்ந்த ஹீரோயின் 2017

'டோரா', 'அறம்' ஆகிய படங்களில் கதையின் நாயகியாக கலக்கிய நயன் தாரா 35.75% வாசகர்களின் வாக்குகளுடன் 2017-ம் ஆண்டின் மனம் கவர்ந்த ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார், தங்கத் தலைவி என போற்றிப் புகழ்ந்து முன்னணியில் வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நயன்தாராவின் அசத்தல் நடிப்புதான் நன்றிக்கடன்.

பாகுபலி - தேவசேனா

பாகுபலி - தேவசேனா

நடிப்பில் பட்டையைக் கிளப்பும் அனுஷ்கா, எந்த கேரக்டர் கொடுத்தாலும் பிரித்தெடுப்பார். கடந்த ஆண்டில் 'சிங்கம் 3' படத்தில் ரொமான்ஸ் காட்டிய அனுஷ்கா, 'பாகுபலி 2' வில் காட்டியது உச்சபட்ச வெறித்தனம். காதல் காட்சிகள், வீரம் மிகுந்த காட்சிகள் என நடிப்பில் விட்டு விளாசிய அம்மணி, 26.78% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சமந்தா

சமந்தா

'மெர்சல்' படத்தில் "டேய் தம்பி..." என அழைத்து விஜய்யை வம்பிழுத்த சமந்தாவை தமிழகமே கொண்டாடியது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவோடு திருமணமாகி அக்கட தேசத்து மருமகளாகியிருக்கும் சமந்தாவுக்காக ஒட்டுமொத்த ரசிகர்கள் 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடினர். திருமணத்திற்குப் பிறகும் முழு வீச்சாக தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவுக்கு 15.43% ரசிகர்களின் ஆதரவு.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

கடந்த ஆண்டில் வெளியான 'தரமணி', 'துப்பறிவாளன்', 'அவள்' படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஆண்ட்ரியா 12.1% வாக்குகளையும், 'தீரன் அதிகாரம் ஒன்று', 'ஸ்பைடர்' படங்களின் மூலம் ரசிகர்களின் ஃபேவரிட் பட்டியலில் இடம்பிடித்த ரகுல் ப்ரீத் சிங் 9.94% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர்.

English summary
Thousands of readers participated in Tamil Filmibeat polls on Tamil cinema 2017. Lady Superstar Nayanthara has been chosen as the Best heroine of 2017 by the readers. Anushka shetty and Samantha got second and third places respectively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X