twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறந்த இசையமைப்பாளர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    கடந்த ஆண்டின் சிறந்த இசை அமைப்பாளர்.

    சென்னை : தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் யார் என நமது தளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாக்களித்தனர்.

    பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அனிருத் இசையமைத்த பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கடந்த ஆண்டில் பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர்

    ஒரு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிப்பது மட்டுமின்றி, குறிப்பிட்ட படத்திற்கு கிடைக்கப்பெறும் வரவேற்பிலும் கணிசமான பங்கு இசையமைப்பாளருக்கு உண்டு. படத்தின் ரிலீஸுக்கு முன்பு வெளியாகும் பாடல்களைப் பொறுத்தே படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது. இப்போதெல்லாம், பாடல்களை மொத்தமாக வெளியிடுவதை விட ஒவ்வொரு டிராக்காக வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

    மியூசிக் டைரக்டர்

    மியூசிக் டைரக்டர்

    ரசிகர்களுக்கு கியூரியாசிட்டி ஏற்றும் விதமாக அவ்வப்போது ஒவ்வொரு பாடல்களைப் பற்றிய அப்டேட்டுகளையும் வெளியிட்டு ஈர்க்கிறார்கள் படக்குழுவினர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பாடல்களும், பின்னணி இசையும் அமையவில்லையென்றால் அவ்வளவுதான். இத்தனையையும் கடந்து இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டியது தான் இன்றைய மியூசிக் டைரக்டர்களுக்கான சவால்.

    அனிருத்

    அனிருத்

    வாசகர்களின் தேர்வுப்படி, 38% வாக்குகளுடன் 2017-ம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வாகி இருப்பவர் அனிருத். அனிருத் இசையமைப்பில் கடந்த ஆண்டில் 'விவேகம்', 'வேலைக்காரன்' ஆகிய படங்கள் வெளியாகின. 'விவேகம்' படத்தின் பின்னணி இசை, அஜித்துக்கு மாஸ் பி.ஜி.எம் என ரசிகர்களைக் கவர்ந்து, 'வேலைக்காரன்' படத்தின் கருத்தவன்லாம் கலீஜாம் பாடலின் மூலம் தெறிக்கவிட்ட அனிருத்துக்கு ரசிகர்களிடையே செம வரவேற்பு.

    யுவன் ஷங்கர் ராஜா

    யுவன் ஷங்கர் ராஜா

    பார்வையாளர்களின் 27% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. பெரும் வரவேற்பைப் பெற்ற 'தரமணி' ஆல்பம் யுவனை ரசிகர்களிடையே இன்னும் நெருக்கமாக்கியது. அதன் பிறகு வெளிவந்த 'கடம்பன்', 'பலூன்' ஆகிய படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. யுவனின் ஸ்பெஷலை கேட்க ஆவலாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    சந்தோஷ் நாராயணன்

    சந்தோஷ் நாராயணன்

    17.39% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 'பைரவா', 'மேயாத மான்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து இந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இந்த ஆண்டில் சூப்பர்ஸ்டாரின் 'காலா' சந்தோஷ் மியூசிக்கோடு வெய்ட்டிங். அதோடு ரசிகர்களும் மரண வெய்ட்டிங்.

    ஜிப்ரான்

    ஜிப்ரான்

    இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது சிறப்பான ஆண்டு. 'அதே கண்கள்', 'மகளிர் மட்டும்' 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அறம்' ஆகிய படங்களுக்கு ஜிப்ரானின் சிறப்பான இசையால் ரசிகர்கள் கொண்டாடினர். விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜிப்ரான் இந்த ஆண்டும் அதைத் தொடரவேண்டும். ஜிப்ரானுக்கு நம் பார்வையாளர்கள் அளித்த வாக்கு சதவீதம் 9.89%.

    சான் ரோல்டன்

    சான் ரோல்டன்

    'பவர் பாண்டி' படத்தில் பவர் காட்டிய சான் ரோல்டன், 'வேலையில்லா பட்டதாரி 2'வில் அனிருத்தை தாண்டி ஈர்க்க முடியவில்லை. தனுஷின் 'ப.பாண்டி' படத்தின் பாடல்கள் சான் ரோல்டனின் இசையில் முரட்ட்டு ஹிட் அடித்தன. நம்பிக்கை மிகுந்த கம்போஸராக வலம் வரும் சான் ரோல்ரனுக்கு ரசிகர்கள் அளித்த வாக்கு மொத்த வாக்குகளில் 5.1%. இது அடுத்த வருடம் இன்னும் பெருக வாழ்த்துவோம்.

    எஸ்.தமன்

    எஸ்.தமன்

    சில பாடல்களின் மூலம் இந்த ஆண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்த எஸ்.தமன் 2.49% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தமனின் இசைக்கென இருக்கும் ரசிகர் கூட்டத்தை திருப்திப்படுத்தும் விதமாக இந்த ஆண்டில் அவரது பாடல்கள் இருக்கும் என நம்புவோம்.

    English summary
    Anirudh has been selected as the 'best music director 2017' based on the audience votes. Last year, Anirudh composed the music for 'Vivegam' and 'Velaikkaran'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X