»   »  பைரவா அப்டேட்: 'பேய் நாயகன்' லாரன்ஸ்க்கு தந்தையாக மாறிய 'கட்டப்பா'

பைரவா அப்டேட்: 'பேய் நாயகன்' லாரன்ஸ்க்கு தந்தையாக மாறிய 'கட்டப்பா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் தனது தந்தையாக நடிக்கும் வாய்ப்பை சத்யராஜ்க்கு நடிகர் லாரன்ஸ் வழங்கி இருக்கிறாராம்.

பேய்ப்படங்களின் நாயகன் ராகவா லாரன்ஸ் தற்போது பைரவா, மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்.

Bhairava: Sathyarj Play Raghava Lawrence Father

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான காஞ்சனா 2 சுமார் 100 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனால் ராகவா லாரன்ஸின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது.

இந்நிலையில் லாரன்ஸ் நடித்து வரும் பைரவா படத்தில் அவரது தந்தையாக நடிக்கும் வாய்ப்பை 'கட்டப்பா' புகழ் சத்யராஜ்க்கு லாரன்ஸ் வழங்கி இருக்கிறார்.

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் சத்யராஜ் புகழ்பெற்று விட்டார். அதனால் தங்களது அடுத்த படங்களில் அவரை ஒப்பந்தம் செய்திட கோலிவுட்டினர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பைரவா படத்தில் லாரன்ஸின் தந்தையாக நடிக்க சத்யராஜ் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. காஞ்சனா படத்தில் சரத்குமாருக்கு அமைந்த கதாபாத்திரம் போன்று இதுவும் மிக வலுவான பாத்திரம் தான் என்று கூறுகின்றனர்.

மேலும் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் தான் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார். சொல்லப் போனால் இந்தப் படத்தின் முதுகெலும்பே சத்யராஜ் பாத்திரம் தான் என்கின்றனர்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். சமீபத்தில் வெளியான கெத்து படத்தில் உதயநிதியின் தந்தையாக சத்யராஜ் நடிப்பில் கெத்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Actor Raghava Lawrence Give an Important Role to Sathyaraj, in his Next Film Bhairava.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil