»   »  பலே வெள்ளையத்தேவா.. இப்படி ‘கோல்மால்’ பண்ணித் தான் காளையை அடக்கினாராமே பல்லாலத்தேவன்!

பலே வெள்ளையத்தேவா.. இப்படி ‘கோல்மால்’ பண்ணித் தான் காளையை அடக்கினாராமே பல்லாலத்தேவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வசூலில் பெரும் சாதனை புரிந்த பாகுபலி படத்தில், பல்லாலத்தேவன் காளையை அடக்கும் காட்சி எவ்வாறு படமாக்கப்பட்டது என்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Select City
Buy Baahubali - The Beginning (Part I) (U/A) Tickets

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் பாகுபலி. பிரம்மாண்டத்தில் மிரட்டிய இப்படம் வசூலிலும் சாதனை புரிந்தது.


பாகுபலியின் கிராபிக்ஸ் காட்சிகளைக் கண்டு உலக நாடுகள் எல்லாம் வியந்தன.


இரண்டாம் பாகம்...

இரண்டாம் பாகம்...

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் பாகுபலி இரண்டாம் பாகம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிராபிக்ஸ் காட்சிகள்...

கிராபிக்ஸ் காட்சிகள்...

இதற்கிடையே அப்படத்தின் காட்சிகள் கிராபிக்ஸ் உதவியுடன் படமாக்கப்பட்ட விதம் குறித்து அவ்வப்போது வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் எவ்வாறு திட்டமிட்டு, கிராபிக்ஸ் உதவியுடன் படமாக்கியிருக்கியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.


மிரட்டும் காட்சிகள்...

மிரட்டும் காட்சிகள்...

பிரபாஸ் மலையில் ஏறி தமன்னாவைத் தேடி அருவி மலை மீது ஏறிச் செல்லும் காட்சி, பரந்து ஓடும் காட்டாறு, ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி, ரம்யாகிருஷ்ணன் ஆற்றின் நடுவே கையில் குழந்தையை ஏந்தும் காட்சி உள்ளிட்டவை எவ்வாறு கிராபிக்ஸ் உதவியுடன் படமாக்கப்பட்டன என்ற வீடியோ சமீபத்தில் வெளியானது.


காளையை அடக்கும் ராணா...

காளையை அடக்கும் ராணா...

இந்நிலையில், தற்போது ராணா காளையை அடக்கும் காட்சியை எவ்வாறு படமாக்கினார்கள் என்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. திரையில் காளை மற்றும் ராணாவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அசந்து போன ரசிகர்கள், தற்போது இக்காட்சிகளைக் கண்டு மேலும் வியந்து போயுள்ளனர்.


வீடியோ...

முக்தா வி.எப் எக்ஸ் பிரேக்டவுன்ஸ் என்ற நிறுவனம்தான் பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் காளையை அடக்கும் காட்சி உருவான விதத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.


க்ரீன்மேட்...

க்ரீன்மேட்...

க்ரீன் மேட் பின்னணியில் காளையில் தலையை மட்டும் வைத்துக் கொண்டு, ராணாவின் ரியாக்சன்களை வாங்கி காட்சியை தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். சில இடங்களில் காளை மாட்டிற்கு பதிலாக கட்டையால் உருவாக்கப்பட்ட உருவத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.


ஹாலிவுட் ஸ்டைலில்...

ஹாலிவுட் ஸ்டைலில்...

படம் வெளியானதும் படம் உருவான விதத்தை வீடியோவாக வெளியிடுவது ஹாலிவுட் வழக்கம். தற்போது அதே வழக்கத்தை பின்பற்றி, பாகுபலி படக்குழுவினரும் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைக்கத் தொடங்கியுள்ளனர்.


English summary
SS Rajamouli’s Baahubali stunned not just Indians but the world audience. Ever wondered how Bhallaladeva fought the Bull? Check out this video.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil