»   »  போன வாரம் கதிர்.. இந்த வாரம் கமல்.. - வைரலாகும் பாரதியார்!

போன வாரம் கதிர்.. இந்த வாரம் கமல்.. - வைரலாகும் பாரதியார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாரதி போல் தனது ப்ரொபைல் மாற்றிய கமல்- வீடியோ

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தற்போது தமிழக அரசியல் பற்றி ட்விட்டரில் தினந்தோறும் ஒரு கருத்தைப் பதிவிட்டு வருகிறார். அவரது அதிரடி ட்வீட்களால் ஆளுங்கட்சியினர் கொஞ்சம் அதிர்ந்துதான் போயுள்ளனர்.

ட்விட்டரில் அவர் போடும் பதிவுகள் புரியவில்லை என சிலர் கூறிவந்தாலும், கமலின் கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கமல் நேற்று பாரதியார் போன்று தான் தோற்றமளிக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளவாசிகளுக்கு செம கன்டென்ட் ஆகியிருக்கிறது.

பாரதியாக கமல்

பாரதி போல முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் கமல் கோவமாகக் காட்சி அளிக்கிறார். இந்தப் புகைப்படத்தில் கமல் தன்னை பாரதியாராகச் சித்தரித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கதிர் லக்‌ஷ்மி

கதிர் லக்‌ஷ்மி

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை உண்டாக்கியது. இந்தக் குறும்படத்தில் பாரதியாரின் கவிதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கணவர் தவிர்த்த இன்னொருவருடன் ஏற்படும் காதலுக்கு பாரதியாரின் வரிகள் பயன்படுத்தப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கதிரும் கமலும்

கதிரும் கமலும்

கடந்த வாரம் வரை கதிர் லட்சுமியிடம் சொன்ன பாரதியார் கவிதைகளால் பாரதியாரை வைத்து விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கமல் பாரதியார் போன்று தோற்றமளிக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருப்பதால் பாரதியார் படம் மீண்டும் வைரலாகி வருகிறது.

அடுத்த பாரதியா

என்னது கமல்தான் அடுத்த பாரதியாரா.. அடப்பாவிகளா இந்தக் கருமத்தை எல்லாம் கேட்கக்கூடாதுனுதான் காதோரம் முண்டாசு கட்டிருக்கியா பாரதியே.. என ஒரு நெட்டிசன் ரிப்ளை செய்துள்ளார்.

கலியுக கதிரே

கமல் வைத்த பாரதியார் படத்தைப் பார்த்து 'கலியுக கதிரே' என ஒருவர் ரிப்ளை செய்துள்ளார்.

தகதகன்னு மின்னுறீங்க

'பார்க்க பாரதியார் மாதிரியே தகதகன்னு மின்னுறீங்க' என ஒருவர் ரிப்ளை செய்திருக்கிறார்.

கவிதைக்கே ரணகளமாச்சு

பாரதியார் கவிதை வாசிச்சதுக்கே போனவாரம் இங்க ரணகளமாச்சு. இப்ப என்னனா பாரதியாராவே மாறி இன்னொருருத்தர் வந்துருக்காப்ல..!

கமல் - கதிர் - பாரதி

'படம் பார்த்து கதை சொல்லவும்' என கமல் மற்றும் 'லட்சுமி' கதிர் படங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.

English summary
KamalHassan has posted a photo yesterday, that he looks like bharathi. Thus, Bharatiyar is again debating content on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil