சிம்பு தங்கமான பையன்.. ஒழுக்கமானவர்.. சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா!

சென்னை: நடிகர் சிம்பு ஒரு தங்கமான பையன் என மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா பாராட்டி தள்ளியுள்ளார்.

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் இன்று நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் சுசீந்திரன், படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி காப்பா, சிம்பு, பாரதி ராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தங்கமான பையன்..

தங்கமான பையன்..

இதில் பேசிய பாரதிராஜா, நடிகர் சிம்புவை பாராட்டி தள்ளினார். பாரதிராஜா பேசும்போது நான் பார்த்து வளர்ந்த பிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள்.

ஒழுக்கமானவர் சிம்பு

ஒழுக்கமானவர் சிம்பு

ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது.

சிறந்த எதிர்காலம் இருக்கிறது

சிறந்த எதிர்காலம் இருக்கிறது

நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுவார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது.

குடும்பப்பாங்கான படம்

குடும்பப்பாங்கான படம்

ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்படம் குடும்பப்பாங்கான படம். இப்படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள். நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம்.

நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’

நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’

ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 27 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம். என் பிள்ளை எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்' நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X