காலில் கொலுசு முகத்தில் வெட்கம்.. பவானி ஸ்ரீயை பூப்போல வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை : பாவக் கதைகள் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார் நடிகை பவானி ஸ்ரீ.

ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வர விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது.

கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகும் வரும் பவானி ஸ்ரீ இப்போது காலில் கொலுசு முகத்தில் வெட்கம் என ட்ரெடிஷனலாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

பல்வேறு கட்டங்களாக

பல்வேறு கட்டங்களாக

மிகவும் பிரபலமான திரை குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் நடிகை பவானி ஸ்ரீ அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். நட்பே துணை படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்திருந்த ஆனந்த் இயக்கத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தில் நடிக்க பவானி முதலில் கமிட்டாகி இருந்தார். பல்வேறு கட்டங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டுள்ளது.

விஜய்சேதுபதியின் தங்கையாக

விஜய்சேதுபதியின் தங்கையாக

இந்த நிலையில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் தோன்றிய க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக படம் முழுவதும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி காட்சிக்கு காட்சி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்ற பவானி ஸ்ரீக்கு இப்பொழுது தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

விடுதலை

விடுதலை

சூரரை போற்று வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்திருந்த இவர் இப்பொழுது நடிகர் சூரிக்கு ஜோடியாக விடுதலை படத்தில் நடித்து வருகிறார். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலையில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

காலில் கொலுசு

காலில் கொலுசு

மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வரும் பவானி சமூக வலைதளங்களில் அடிக்கடி இலைமறை காய்மறைவாக வெளியிடும் கவர்ச்சி புகைபடங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வர இப்பொழுது பக்கா கிராமத்து ஸ்டைலில் அச்சு அசல் கிராமத்து பெண் போலவே காலில் கொலுசு முகத்தில் வெட்கம் என ட்ரெடிஷனல் மோடுக்கு மாறியுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X