வெட்கக்கேடு.. மேடையில் அசிங்கமா நடந்துக்கொண்ட நடிகர்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
லக்னோ: சில நடிகர்கள் பொது வெளியில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் பிடிக்காது. காரணம் ஆவர்கள் தாங்கள் தான் சுப்பீரியர் பவர் கொண்டவர்கள் தன்னை யாராலும் விமர்சனத்திற்கு ஆளாக்கி விட முடியாது, கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்பில் அவ்வாறு செய்வார்கள். குறிப்பாக மேடையிலேயே நடிகைகளை அவமரியாதையாக நடத்துவது, நடிகர்களை அவமரியாதையாக நடத்துவது, கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவது என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்படியான சம்பவம்தான் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
அதாவது லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரபல ஹரியான்வி நடிகை அஞ்சலி ராகவ் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்த போஜ்புரி நடிகர் பவன் சிங், நடிகை அஞ்சலி ராகவின் இடுப்பைத் தடவினார். அப்போது நடிகை முதலில் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் மேடை என்பதால் அவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திவிட்டு அடுத்து பேசத் தொடங்கினார். கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளின் இடுப்பில் கை வைப்பது, அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று அவை செய்தியாக மாறி உள்ளது.

நடிகையின் மீது பாலியல் சீண்டல்: ஆனால் லக்னோவில் நடை பெற்ற சம்பவம் என்பது அப்படி இல்லை. போஜ்பூரி திரையுலகில் மதிப்பை பெற்றுள்ள நடிகர் பவன் சிங். இவர் தனக்கு அருகில் நின்று பேசிக் கொண்டு இருந்த நடிகையின் இடுப்பை தடவினார். அதுவும் ஒரு முறை மட்டும் இல்லாமல் இரண்டு மூன்று முறை செய்தார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இப்படி இருக்கும்போது, இந்த சம்பவத்திற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் நடிகரை கடுமையாக சாடத் தொடங்கிவிட்டனர்.
மன்னிப்பு: நடிகை அஞ்சலி ராகவ் இந்த சம்பவத்தால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், போஜ்புரி சினிமா உலகத்தில் இருந்தே வெளியேறி விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை அஞ்சலி ராகவ் இவ்வாறு பேசிய வெளியிட்ட வீடியோ இணையத்தில் மேலும் வேகமாக பரவியது. இதனால் நடிகர் பவன் சிங் மேலும் இணையவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் பவன் சிங், நான் இடுப்பை தொட்டது அஞ்சலிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரது மன்னிப்பு என்பது இப்போது சர்ச்சையாக மாறி உள்ளதால் தான் அவர் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்னரும் அவ்வப்போது மேடைகளில் நடிகைகளை இவ்வாறு மோசமாக நடத்தியுள்ளார் எனவும் அவர்களிடத்திலும் இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











