»   »  குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போன்றே நடிக்கும் பிக் பாஸ்

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போன்றே நடிக்கும் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற என்னென்னவோ செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியாவால் அமோகமாக சென்றது. டிஆர்பி கண்டமேனிக்கு எகிறியது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆரவுடனான காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஓவியா கிளம்பிய கையோடு நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்து தூங்கிவிட்டது. பிக் பாஸும் என்னவெல்லாமோ செய்தும் டிஆர்பி மட்டும் பழையபடி வரவில்லை.

ஜூலி, ஆர்த்தி

ஜூலி, ஆர்த்தி

ஜூலி மற்றும் ஆர்த்தியை மீண்டும் அழைத்து வந்தால் டிஆர்பியை ஏற்றலாம் என்று நினைத்து அழைத்து வந்தார்கள். ஆனால் ஜூலி, ஆர்த்தி ட்ரிக் வேலை செய்யவில்லை.

ட்ரிக்கர்

ட்ரிக்கர்

பார்வையாளர்கள் கடுப்பாகி ஓட்டு போட்டு போட்டு அலுத்துப் போய் வெளியே அனுப்பி வைத்த ட்ரிக்கர் சக்தியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டார்.

கடுப்பு

கடுப்பு

பிக் பாஸின் ட்ரிக் எல்லாம் உல்ட்டாவாக வேலை செய்கிறது. டிஆர்பி ஏறவில்லை மாறாக பார்வையாளர்கள் கோபம் தான் அதிகரித்துள்ளது. நாங்க அப்ப எதுக்கு ஓட்டு போடணும் என்று பார்வையாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

பார்வையாளர்களின் அதிருப்தி, ஓவியா ஆர்மியின் கோபம் என்று அனைத்தும் தெரிந்தும் தெரியாதது போன்றே நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

English summary
Big Boss TV reality show organizers are trying their level to increase the TRP. TRP went low after Oviya left Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil