பிக் பாஸ் பற்றிய உண்மையை புட்டு புட்டு வைக்கும் ஆய்வு

By Siva

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ப்ளீப் ஆய்வுக் குழு ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நடக்கும் விஷயங்களை வைத்து ப்ளீப் ஆய்வுக் குழு ஆய்வு நடத்தியுள்ளது. அதன் ஆய்வு முடிவு ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆய்வு முடிவின் விபரம் இதோ,

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கில் தான் பிக் பாஸ் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. பிக் பாஸ் மற்றும் அதன் போட்டியாளர்கள் பற்றி பேச மட்டும் ஃபேஸ்புக்கில் 100 பக்கங்கள் உள்ளன. ஓவியா, பிக் பாஸ் பற்றி 5.3 லட்சம் பேர் பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கை அடுத்து ட்விட்டரில் பிக் பாஸ் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

ஹீரோ

ஹீரோ

பிக் பாஸின் ஹீரோ ஓவியா தான். சமூக வலைதளங்களில் 53 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஓவியா பற்றி தான் பேசுகிறார்கள். ஓவியா பற்றி நல்லவிதமாகவே பேசுகிறார்கள். ஓவியா நல்ல பெண் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆண்களும், பெண்களும் சரிசமமாக ஓவியா மீது பாசம் வைத்துள்ளனர்.

ஓவியா

ஓவியா

ஓவியா இல்லை, பிக் பாஸும் இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். ஓவியா வெளியேறியதால் பிக் பாஸை பார்க்க மாட்டோம் என்று பலரும் உறுதியாக உள்ளனர். ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் கமல் ஹாஸனை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

ஓவியா இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் வெகுவாக குறையும். அதனால் ஓவியாவை விஜய் டிவி மீண்டும் அழைத்து வரும் வாய்ப்பு அதிகம்.

மலையாளி

மலையாளி

பிக் பாஸ் ஓவியாவிடம் நியாயமாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. ஓவியா சின்னப்புள்ளத்தனமாக உள்ளார், ஆரவிடம் வழிகிறார், மலையாளி என்றும் சிலர் பேசியுள்ளனர்.

வில்லன்

வில்லன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வில்லன் என்றால் அது இரண்டு பேர். முதல் வில்லன் காயத்ரி, இரண்டாவது வில்லன் சக்தி. ஓவியாவின் முதல் எதிரியே காயத்ரி என்கிறார்கள் பார்வையாளர்கள். காயத்ரியையும், சக்தியையும் ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். பிற போட்டியாளர்களை பார்வையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆரவ்

ஆரவ்

ஆரவுக்கு கேரக்டரே இல்லை. ஆரவ் ஓவியாவுடன் நெருங்கிப் பழகியதும், கழற்றிவிட்டதும் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

கமல்

கமல்

கமல் ஹாஸன் சிறந்த தொகுப்பாளர் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் ஓவியா ஆர்மியால் கமல் ஹாஸன் பற்றிய பேச்சு மிகக் குறைவே. அவர் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஸ்கிரிப்ட்

ஸ்கிரிப்ட்

பிக் பாஸ் ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி, அந்த வீட்டில் நடக்கும் அத்தனை கூத்தும் எழுதிக் கொடுத்து நடப்பது என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தாக்கம்

தாக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் தெரிகிறது. டிவி நிகழ்ச்சி என்பதை தாண்டி பலரின் வீட்டில் பேசப்படும் விஷயமாகிவிட்டது பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X